GOAT Audio Launch : கோட் படத்தின் இசைவெளியீட்டு விழா மலேஷியாவில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விஜய் நடிக்கும் படங்கள் என்றாலே படம் வெளியாவதற்கு முன்பு பிரமாண்டமாக இசை வெளியீட்டு விழா நடைபெறுவது வழக்கமான ஒன்று. கடைசியாக வாரிசு திரைப்படத்திற்கு இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. அதனை தொடர்ந்து லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடைபெறும் என தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில், சில காரணங்களால் ரத்து செய்யப்பட்டது. லியோ படத்தை […]
Helicopter Crash: மலேசியாவின் லுமுட் நகரில் 2 கடற்படை ஹெலிகாப்டர்கள் விபத்துக்குள்ளானதில்10 வீரர்கள் பலியாகினர். மலேசியாவில் கடற்படை பயிற்சியின்போது இரு ஹெலிகாப்டர்கள் மோதி மிகப்பெரிய விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர் என்று முதல்கட்டத் தகவல் வெளியாகியுள்ளது. மலேசிய கடற்படை தினத்தின் 90ஆம் ஆண்டு நிகழ்ச்சிக்காக 6க்கும் மேற்பட்ட ராணுவ ஹெலிகாப்டர்கள் ஒத்திகையில் ஈடுபட்டன. அப்போது, 2 ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கீழே விழுந்து நொறுங்கும் பதற வைக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. Ten […]
மலேசியாவின் 17வது புதிய மாமன்னராக ஜோகூர் மாநிலத்தின் சுல்தான் இப்ராகிம் இஸ்கந்தர் பதவியேற்றார். மாமன்னரின் முடிசூட்டு விழா மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள தேசிய அரண்மனையில் கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவில் ஜோகூர் மாநிலத்தை சேர்ந்த சுல்தான் இப்ராஹிம் இஸ்கந்தர் மலேசியா நாட்டின் புதிய மன்னராகப் பதவியேற்றுக்கொண்டார். இந்த முடிசூட்டு விழாவில் மாநில மன்னர்கள், மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம், துணைப் பிரதமர்கள் அகமது ஸாஹிட் ஹமிடி மற்றும் ஃபடில்லா யூசோப், அரசாங்க அதிகாரிகள், பிரமுகர்கள் கலந்துகொண்டனர். அதன்படி, […]
கடந்த மார்ச் 8, 2014 அன்று 227 பயணிகள் மற்றும் 12 விமான பணியாளர்களுடன் MH370 எனும் விமானம் தெற்கு மலேசியாவில் உள்ள கோலாலம்பூர் விமான நிலையத்தில் இருந்து சீனாவின் பெய்ஜிங் புறப்பட்டது . ஆனால் குறிப்பிட்ட இடத்திற்கு செல்லும் முன்னரே நடு வான்வழியில் காணாமல் போனது குறிப்பிடத்தக்கது. உலகளாவிய பல்வேறு அமைப்பினரின் தீவிர தேடுதல் நடவடிக்கைகளுக்கு பிறகும் விமானம் காணாமல் போன இடம் பயணித்தவர்கள் பற்றிய விவரம் இன்று வரை கண்டுபிடிக்கப்படவில்லை. பேரக்குழந்தைகளை பார்க்க ஆந்திராவில் […]
சுற்றுலாத்துறையை பெரும் வருமானமாக கொண்ட பெரும்பாலான நாடுகள் தங்கள் நாட்டுக்கு சுற்றுலா பயணிகளை வரவைக்க , அவர்களை ஈர்க்கும் விதத்தில் பல்வேறு சலுகைகளை அவ்வப்போது அறிவிப்பதுண்டு. அந்தந்த நாடுகளில் சுற்றுலா பயணிகளின் வருகையை கணக்கிட்டு வருமானம் குறைவாக இருந்தால் இந்த சலுகைகள் வருவது வழக்கமான ஒன்று. இதில், முன்னதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சுற்றுலாத்துறையை பெரிதும் நம்பி இருக்கும் தாய்லாந்து நாட்டிற்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்ததை தொடர்ந்து, கடந்த மாதம் நவம்பர் மாதம் 10ஆம் […]
மலேசியாவில் தனது தந்தையுடன் மீன்பிடித்து கொண்டிருந்த 1 வயதான சிறுவனை முதலை ஒன்று உயிருடன் தின்றுவிட்டது. மலேசியா: சபாவில் உள்ள லாஹாட் டத்து என்ற கடற்கரையில் 45 வயதாகிய தனது தந்தையுடன் மீன் பிடித்து கொண்டிருக்கையில், 11 அடி கொண்ட முதலை ஒன்று சிறுவனை இழுத்து உயிருடன் தின்றது. அந்த முதலையிடம் இருந்து தனது மகனை காப்பாற்ற முயன்ற தந்தையின் முயற்சி வீணானது. மகனை காப்பாற்றும் முயற்சியில் அவருக்கு தலையில் காயங்கள் ஏற்பட்டன. கடினமாக போராடிய பிறகும் […]
மலேசிய நாடாளுமன்ற தேர்தல் முடிவில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், புதிய பிரதமர் அறிவிப்பு. மலேசியாவின் புதிய பிரதமராக அன்வர் இப்ராஹிமை அறிவித்தார் மன்னர் அல்-சுல்தான் அப்துல்லா. அதன்படி, மலேசியாவின் 10வது பிரதமராக அன்வர் இப்ராஹிம் பதவியேற்றார். கடந்த வார இறுதியில் நடந்த தேர்தலில் அன்வரின் பக்காத்தான் ஹராப்பான் (PH) கூட்டணி அதிக இடங்களைப் பெற்றது. ஆனால், அரசாங்கத்தை அமைப்பதற்குத் தேவையான 112 இடங்களைப் பெற்ற நாடாளுமன்ற பெரும்பான்மையுடன் எந்தக் கட்சியும் அல்லது எந்த கூட்டணியும் உருவாகவில்லை. எனவே, […]
மலேசியாவின் கோலாலம்பூரில் பிறந்த அஞ்சலை பொன்னுசாமி அவர்கள் 1943 ஆம் ஆண்டு நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்கள் உருவாக்கிய இந்திய தேசிய ராணுவப்படையில் (ஐ.என்.ஏ.) தன்னை இணைத்து கொண்டு நாட்டின் சுதந்திரத்துக்காக போராடியவர்.இந்நிலையில்,இந்திய விடுதலைப் போராளி அஞ்சலை பொன்னுசாமி அவர்கள் வயது(102 ) மூப்பால் மலேசியாவில் நேற்று காலமானார்.இதனையடுத்து,அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி,ஆளுநர் ஆர்என்ரவி உள்ளிட்டோர்இரங்கல் தெரிவித்திருந்தனர். இந்நிலையில்,இந்திய விடுதலைப் போராளி அஞ்சலை பொன்னுசாமி அவர்களின் மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.மேலும்,இது […]
திருச்சியில் இருந்து கோலாலம்பூருக்கு தினசரி விமான சேவை வழங்க உள்ளதாக இண்டிகோ நிறுவனம் அறிவிப்பு. உலகம் முழுவதும் கொரோனா பரவல் குறைந்த நிலையில், சர்வதேச விமான சேவைகள் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி வருகிறது. அதன்படி, உள்நாட்டு, வெளிநாட்டு விமான நிறுவனங்கள் வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கையை தற்போது அதிகரித்துள்ளன. இந்த நிலையில், திருச்சி மற்றும் மலேசியா நாட்டின் தலைநகரான கோலாலம்பூருக்கு தினசரி விமான சேவை வழங்க உள்ளதாக இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது. திருச்சி மற்றும் கோலாலம்பூர் […]
சென்னை:சிங்கப்பூர் மற்றும் மலேசியாவுடன் தற்காலிக விமான சேவைகளை வழங்குவதற்கு,தற்காலிக ‘விமானப் போக்குவரத்து’ ஒப்பந்தத்தை ஏற்படுத்துமாறு மத்திய அமைச்சருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். சிங்கப்பூர் மற்றும் மலேசியா நாடுகளுக்கு இடையில் தற்காலிக கொரோனா கால “விமானப் போக்குவரத்து ஏற்பாடுகள்” உடன்படிக்கையை செய்து கொள்ளுமாறு கோரி,மத்திய சிவில் விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்யா சிந்தியாவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார்.அக்கடிதத்தில்,முதல்வர் கூறியுள்ளதாவது: “சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுடன் கொரோனா கால விமானப் […]
முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பயணிகளுக்கு செப்டம்பர் 16(நாளை) முதல் மலேசியாவின் விடுமுறைப் பகுதியான மிகப்பெரிய லங்காவி தீவு,மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் பாதிப்பானது கடந்த ஆண்டை விட நடப்பு ஆண்டு மே மாதத்தில் பல மடங்கு அதிகரித்து காணப்பட்டது. இதனால்,இந்தியா உள்ளிட்ட நாடுகளைப் போன்று மலேசிய நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு தழுவிய முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதற்கிடையில்,மலேசியாவில் கடந்த ஆண்டு மார்ச் 23 ஆம் […]
மலேசியாவின் புதிய பிரதமராக துணைப் பிரதமராக இருந்த இஸ்மாயில் சப்ரி யாகூப் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மலேசியாவில் பிரதமராக இருந்த மகாதீர் முகமது அவர்கள் கூட்டணி கட்சிகளுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக திடீரென பதவியிலிருந்து விலகினார். இதை தொடர்ந்து அப்போது உள்துறை அமைச்சராக இருந்த மொகைதின் யாசின் அவர்கள் தனது ஆதரவாளர்கள் மற்றும் எதிர்க்கட்சிகளுடன் இணைந்து புதிய கூட்டணியை உருவாக்கி பிரதமராகினார். ஆனால் தற்பொழுது கூட்டணியில் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக மொகைதின் யாசின் அவர்களும் கடந்த சில […]
கொரோனா தொற்று பரவல் காரணமாக மலேசியாவில் வருகின்ற மே 12 முதல் ஜூன் 7 ஆம் தேதி வரையுள்ள 30 நாட்கள் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் பாதிப்பானது கடந்த ஆண்டை விட தற்போது பல மடங்கு அதிகரித்து வருகின்றது.இதன்காரணமாக கொரோனா பரவலை கட்டுப்படுத்த உலக நாடுகள் அனைத்தும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில்,மலேசிய நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மே 12 முதல் அடுத்த மாதமான […]
கொரோனா வைரஸ் அச்சம் மலேசியாவில் மீண்டும் ஊரடங்கை அறிவிக்கப்பட்டது. தென்கிழக்கு ஆசிய நாட்டின் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பு நேற்றய நிலவரப்படி 135,000 ஆக அதிகரித்துள்ளதால், மலேசியாவின் பிரதமர் முஹைதீன் யாசின் தலைநகர் கோலாலம்பூரிலும் ஐந்து மாநிலங்களிழும் இரண்டு வாரம் ஊரடங்கு அறிவித்தார். இந்நிலையில், இரண்டு வார ஊரடங்கின் போது மாநிலங்களுக்கு இடையேயான பயணங்களும் தடைசெய்யப்படும் என்று முஹைதீன் கூறினார். ஆனால், கடுமையான விதிமுறைகளின் கீழ் ஐந்து அத்தியாவசிய துறைகள் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும் என்று உறுதியளித்தார்.
வெளிநாடுகளில் இருந்து மலேசியாவிற்கு பயணிகள் வர டிசம்பர் வரை தடை செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா தொற்று காரணமாக வெளிநாடுகளில் இருந்து வரும் நபர்களை பல நாடுகளில் தடை செய்துள்ளனர். தற்போது பல இடங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. அதனால் ஒரு சில இடங்களில் ஊரடங்கில் தளர்வு செய்தும் உள்ளனர். அந்த வகையில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளில் கொரோனாவின் தாக்கம் முற்றிலுமாக குறைந்து வருகிறது. அதே போன்று அமெரிக்கா, ரஷ்யா, மெக்சிகோ, […]
இந்தியாவை மலேசியா, மியான்மர் மற்றும் சிங்கப்பூர் உடன் இணைக்கும் 8,100 கிலோமீட்டர் கேபிள் திட்டம் கையெழுத்திடபட்டுள்ளது. டிஜிட்டல் வளர்ச்சிக்கு தற்போதைய காலத்தில் ஆசியாவில் முன்னுரிமை கொடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், அதன் ஒரு பகுதியாக மியான்மர், மலேசியா, இந்தியா மற்றும் சிங்கப்பூர் இடையிலான ஆப்டிகல் பைபர் கேபிள்களை இணைக்கும் பணியை சிங்கப்பூரை சேர்ந்த ஓரியண்ட் லிங்க் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுத்த உள்ளதாக ஜப்பானின் என்இசி நிறுவனம் அறிவித்துள்ளது. ஜப்பானை சேர்ந்த NEC Corp மற்றும் சிங்கப்பூரை சேர்ந்த Orient […]
உலகம் தற்போது கொரோனா வைரஸ் பிடியில் சிக்கி தவித்து வருகிறது. இந்த வைரஸில் இருந்து விடுபட பல நாடுகள் தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க முயற்சி செய்து வருகின்றனர். இந்நிலையில், கொரோனா வைரஸை விட 10 மடங்கு அதிக வேகத்தில் பரவக்கூடிய புதிய வைரஸ் ஒன்றை மலேசியா கண்டுபிடித்துள்ளனர். D614G என கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த வைரஸ் கொரோனாவை விட 10 மடங்கு வேகமாக பரவும். தமிழகத்தில் இருந்து மலேசியா சென்ற ஒரு நபருக்கு சந்தேகத்தின் அடிப்படையில் கொரோனா வைரஸ் பரிசோதனை […]
மலேசியாவில் பத்து மடங்கு வேகமாக பரவும் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகத்தின் தலைமை ஆணையர் தெரிவித்துள்ளார். சீனாவில் பரவதொடங்கிய கொரோனா வைரஸ் தாக்கம், உலகளவில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் நோக்கத்தில் உலகநாடுகள் தீவிரம் காட்டிவருகிறது. இந்தநிலையில், மலேசியாவில் கொரோனாவைக் காட்டிலும், பத்து மடங்கு வேகமாகப் பரவும் தன்மையுடைய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டதாக மலேசிய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் தலைமை ஆணையர் டாக்டர் நூர் ஹிஷாம் தெரிவித்துள்ளார். அதற்கு “D614G” என பெயரிட்டுள்ளனர். அந்த […]
தூண்டுதல் மீனின் 40 வகை இனங்கள் நீர்நிலைகளில் காணப்பட்டாலும் இவற்றில் பெரும்பாலானவை பெரிய தலையுடன் ஓவல் வடிவ உடலைக் கொண்டுள்ளன. அவை வலுவான தாடை, வாய் மற்றும் பற்களை கொண்டுள்ளது. இயற்கை நம்மை வெவ்வேறு வழிகளில் ஆச்சரியப்படுத்துகிறது. உயிரினங்களிடையே உள்ள மாறுபாடும் பரிணாமமும் மிக அழகான ரகசியங்களில் ஒன்றாகும். நம் உலகில் ஏராளமான தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் உள்ளன. அவை நம் மனதில் உள்ள உயிரினங்களின் கருத்துக்கு எங்கும் இல்லை. இந்த இனங்களில் ஒன்று தூண்டுதல் மீன். […]
உலகம் முழுவதும் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகமாகவே காணப்படுகிறது. இந்நிலையில் சிங்கப்பூரிலும் கொரோனா வைரஸ் தனது வேலையை காட்ட தொடங்கியுள்ளது. தற்போது வரை சிங்கப்பூரில் 18,778 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும் இதுவரை 18 பேர் மட்டுமே இந்த தொற்றின் காரணமாக உயிரிழந்துள்ளனர். இதனால் சிங்கப்பூரில் இறப்பு எண்ணிக்கை 0.1 சதவீதம் என்ற அளவிலேயே கட்டுக்குள் உள்ளது. சிங்கப்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19,000 நெருங்கி வரும் நிலையில் அங்கு வேலைக்கு சென்றுள்ள இந்தியர்கள் […]