மலேசியாவின் 17வது புதிய மாமன்னராக ஜோகூர் மாநிலத்தின் சுல்தான் இப்ராகிம் இஸ்கந்தர் பதவியேற்றார். மாமன்னரின் முடிசூட்டு விழா மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள தேசிய அரண்மனையில் கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவில் ஜோகூர் மாநிலத்தை சேர்ந்த சுல்தான் இப்ராஹிம் இஸ்கந்தர் மலேசியா நாட்டின் புதிய மன்னராகப் பதவியேற்றுக்கொண்டார். இந்த முடிசூட்டு விழாவில் மாநில மன்னர்கள், மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம், துணைப் பிரதமர்கள் அகமது ஸாஹிட் ஹமிடி மற்றும் ஃபடில்லா யூசோப், அரசாங்க அதிகாரிகள், பிரமுகர்கள் கலந்துகொண்டனர். அதன்படி, […]
கடந்த மார்ச் 8, 2014 அன்று 227 பயணிகள் மற்றும் 12 விமான பணியாளர்களுடன் MH370 எனும் விமானம் தெற்கு மலேசியாவில் உள்ள கோலாலம்பூர் விமான நிலையத்தில் இருந்து சீனாவின் பெய்ஜிங் புறப்பட்டது . ஆனால் குறிப்பிட்ட இடத்திற்கு செல்லும் முன்னரே நடு வான்வழியில் காணாமல் போனது குறிப்பிடத்தக்கது. உலகளாவிய பல்வேறு அமைப்பினரின் தீவிர தேடுதல் நடவடிக்கைகளுக்கு பிறகும் விமானம் காணாமல் போன இடம் பயணித்தவர்கள் பற்றிய விவரம் இன்று வரை கண்டுபிடிக்கப்படவில்லை. பேரக்குழந்தைகளை பார்க்க ஆந்திராவில் […]
சுற்றுலாத்துறையை பெரும் வருமானமாக கொண்ட பெரும்பாலான நாடுகள் தங்கள் நாட்டுக்கு சுற்றுலா பயணிகளை வரவைக்க , அவர்களை ஈர்க்கும் விதத்தில் பல்வேறு சலுகைகளை அவ்வப்போது அறிவிப்பதுண்டு. அந்தந்த நாடுகளில் சுற்றுலா பயணிகளின் வருகையை கணக்கிட்டு வருமானம் குறைவாக இருந்தால் இந்த சலுகைகள் வருவது வழக்கமான ஒன்று. இதில், முன்னதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சுற்றுலாத்துறையை பெரிதும் நம்பி இருக்கும் தாய்லாந்து நாட்டிற்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்ததை தொடர்ந்து, கடந்த மாதம் நவம்பர் மாதம் 10ஆம் […]
மலேசியாவில் தனது தந்தையுடன் மீன்பிடித்து கொண்டிருந்த 1 வயதான சிறுவனை முதலை ஒன்று உயிருடன் தின்றுவிட்டது. மலேசியா: சபாவில் உள்ள லாஹாட் டத்து என்ற கடற்கரையில் 45 வயதாகிய தனது தந்தையுடன் மீன் பிடித்து கொண்டிருக்கையில், 11 அடி கொண்ட முதலை ஒன்று சிறுவனை இழுத்து உயிருடன் தின்றது. அந்த முதலையிடம் இருந்து தனது மகனை காப்பாற்ற முயன்ற தந்தையின் முயற்சி வீணானது. மகனை காப்பாற்றும் முயற்சியில் அவருக்கு தலையில் காயங்கள் ஏற்பட்டன. கடினமாக போராடிய பிறகும் […]
மலேசியாவின் கோலாலம்பூரில் பிறந்த அஞ்சலை பொன்னுசாமி அவர்கள் 1943 ஆம் ஆண்டு நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்கள் உருவாக்கிய இந்திய தேசிய ராணுவப்படையில் (ஐ.என்.ஏ.) தன்னை இணைத்து கொண்டு நாட்டின் சுதந்திரத்துக்காக போராடியவர்.இந்நிலையில்,இந்திய விடுதலைப் போராளி அஞ்சலை பொன்னுசாமி அவர்கள் வயது(102 ) மூப்பால் மலேசியாவில் நேற்று காலமானார்.இதனையடுத்து,அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி,ஆளுநர் ஆர்என்ரவி உள்ளிட்டோர்இரங்கல் தெரிவித்திருந்தனர். இந்நிலையில்,இந்திய விடுதலைப் போராளி அஞ்சலை பொன்னுசாமி அவர்களின் மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.மேலும்,இது […]
சென்னை:சிங்கப்பூர் மற்றும் மலேசியாவுடன் தற்காலிக விமான சேவைகளை வழங்குவதற்கு,தற்காலிக ‘விமானப் போக்குவரத்து’ ஒப்பந்தத்தை ஏற்படுத்துமாறு மத்திய அமைச்சருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். சிங்கப்பூர் மற்றும் மலேசியா நாடுகளுக்கு இடையில் தற்காலிக கொரோனா கால “விமானப் போக்குவரத்து ஏற்பாடுகள்” உடன்படிக்கையை செய்து கொள்ளுமாறு கோரி,மத்திய சிவில் விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்யா சிந்தியாவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார்.அக்கடிதத்தில்,முதல்வர் கூறியுள்ளதாவது: “சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுடன் கொரோனா கால விமானப் […]
முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பயணிகளுக்கு செப்டம்பர் 16(நாளை) முதல் மலேசியாவின் விடுமுறைப் பகுதியான மிகப்பெரிய லங்காவி தீவு,மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் பாதிப்பானது கடந்த ஆண்டை விட நடப்பு ஆண்டு மே மாதத்தில் பல மடங்கு அதிகரித்து காணப்பட்டது. இதனால்,இந்தியா உள்ளிட்ட நாடுகளைப் போன்று மலேசிய நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு தழுவிய முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதற்கிடையில்,மலேசியாவில் கடந்த ஆண்டு மார்ச் 23 ஆம் […]