உலகளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா 12வது இடத்தில் உள்ளது.
உலகளவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகில் மொத்தம் 4,355,466 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 1, 610,511 பேர் குணமடைந்துள்ள நிலையில் 293,092 பேர் உயிரிழந்துள்ளனர் என்று worldometer இணையத்தில் வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவில் 1,408,636 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து ஸ்பெயின் 2,69,520, ரஷ்யா 242,520, இங்கிலாந்து 226,463, இத்தாலியில் 221,216 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வரிசையில் இந்தியாவில் 74,926 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் கொரோனா பாதிப்பில் இந்தியா 12வது இடத்தில் உள்ளது.
unknown node