கொரோனா தடுப்பூசிகள் வைத்திருப்பதில் உலக நாடுகளிடையே பாகுபாடு நிலவுவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா துன்பெர்க் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டதில் இருந்து வல்லரசு நாடுகளான அமெரிக்கா,பிரான்ஸ்,ஜெர்மனி,இஸ்ரேல்,பிரிட்டன் மற்றும் கனடா போன்ற நாடுகள் கொரோனா தடுப்பு மருந்துகளை அதிக அளவில் வாங்கி வைத்துக் கொள்கின்றன.இதனால் ஆசியா,ஆப்பிரிக்கா கண்டங்களில் உள்ள ஏழை மற்றும் வளரும் நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி மருந்துகள் சென்றடையாமல் இருக்கின்றன. இந்த நிலையில்,கொரோனா தடுப்பூசிகள் விநியோகம் செய்வதில் பாகுபாடு நிலவுவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா துன்பெர்க் தெரிவித்துள்ளார். […]
இங்கிலாந்தில் கொரோனாவை கட்டுப்படுத்த வெளியிட்ட புதிய வழிமுறைகள். உலகளவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இங்கிலாந்து 226,463 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இங்கிலாந்து உலகளவில் நான்காம் இடத்தில் உள்ளது. இங்கிலாந்தில் 32,692 பேர் உயரிழந்துள்ளனர். இந்நிலையில், இங்கிலாந்தில் கொரோனாவை கட்டுபடுத்த பல்வேறு வழிமுறைகள் அறிவித்துள்ளனர். அதாவது, அடிக்கடி கை கழுவ வேண்டும், துணிகளை துவைத்து உபயோகிக்க வேண்டும், வீடுகளில் […]
உலகளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா 12வது இடத்தில் உள்ளது. உலகளவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகில் மொத்தம் 4,355,466 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 1, 610,511 பேர் குணமடைந்துள்ள நிலையில் 293,092 பேர் உயிரிழந்துள்ளனர் என்று worldometer இணையத்தில் வெளியிட்டுள்ளது. இந்நிலையில், கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவில் 1,408,636 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து ஸ்பெயின் 2,69,520, ரஷ்யா 242,520, இங்கிலாந்து 226,463, இத்தாலியில் 221,216 பேர் கொரோனா வைரஸால் […]
மக்கள் செத்தாலும் பரவாயில்லை, ஊரடங்கை நீக்கி பொருளாதாரத்தை மீட்பேன் என்ற அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி முடிவு. சீனாவின் வுகான் நகரில் முதலில் பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. கொரோனா பாதிப்பில் அமெரிக்க முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 12 லட்சத்தை தாண்டிய நிலையில் பலி எண்ணிக்கை 72 ஆயிரத்தை தாண்டியது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் ஃபீனிக்ஸீல் உள்ள ஹனிவெல் மாஸ்க் தயாரிக்கும் தொழிற்சாலையை பார்வையிட்டுள்ளார். அப்போது பேசிய டிரம்ப் […]
அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு 27,348 பேருக்கு உறுதி. சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியுள்ளது. இதனால் உலக முழுவதும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. உலகம் முழுவதும் 35,02,126 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 11,24,127 பேர் குணமடைந்துள்ளனர். 2,47,107 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. அமெரிக்காவில் 1,188,122 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 178,263 பேர் குணமடைந்துள்ளனர். இதில் […]
தற்போது உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தற்போது நாளுக்கு நாள் அதன் கோர தாண்டவத்தை அதிகரித்து கொண்டே இருக்கிறது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடுமையாக பின்பற்றப்படுகிறது. உலகம் முழுக்க இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,86,702 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் 1,17,448 குணமடைந்து வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளனர். இதுவரை கொரோனா வைரசால் 22,020 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.