உலகளவில் 2 கோடியை கடந்த கொரோனா பாதிப்பு – உயிரிழப்பு & குணமாகியவர்கள் எவ்வளவு?

உலகளவில் கொரோனாவின் பாதிப்பு 2 கோடியை கடந்துள்ளது.

உலகளவில் கொரோனாவின் பாதிப்பு 2 கோடியை கடந்துள்ளது.

நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்லும் கொரோனா பாதிப்பு, தற்பொழுது வரை குறைந்த பாடில்லை. இதுவரை உலகம் முழுவதிலும் 2,00,24,263 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 7,33,995 பேர் உயிரிழந்துள்ளனர். 1,28,98,238 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உலகம் முழுவதும் புதிதாக 2,19,598 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். மேலும் நேற்று ஒரே நாளில் புதிதாக 4,798 பேர் உயிரிழந்துள்ளனர். தற்பொழுது மருத்துவமனைகளில் 63,90,460 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.