#Breaking: பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் இந்திய வருகை.. 2-வது முறையாக ரத்து!

British Prime Minister Boris Johnson's visit to India has been canceled due to Corona virus outbreak in India.

இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் இந்திய வருகை திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், இம்மாத இறுதியில் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். பிரெக்ஸிட் கூட்டமைப்பு நாடுகளின் பயணத்திற்கு பிறகு பிரதமர் போரிஸ் ஜான்சன் மேற்கொள்ளும் முக்கியமான பயணம் என்று இப்பயணம் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில், பிரதமர் போரிஸ் ஜான்சனின் பயணம் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல இந்தியாவின் குடியரசு தினத்தன்று சிறப்பு விருந்தினராக போரிஸ் ஜான்சன் கலந்துகொள்ளவிருந்தார். அப்பொழுது இங்கிலாந்தில் கொரோனா தொற்று அதிகரித்த காரணத்தால் அந்தப் பயணம் ரத்து செய்யப்பட்டது. தற்பொழுது இரண்டாவது முறையாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் இந்திய வருகை பயணம் ரத்து செய்யப்பட்டது, குறிப்பிடத்தக்கது.