BREAKING: மக்கள் அமைதி காக்க வேண்டும் – அதிபர் கோட்டாபய ராஜபக்சே ட்வீட்

வன்முறையை கைவிட்டு அமைதி காக்க வேண்டும் என்று மக்களை கேட்டுக்கொள்கிறேன் என அதிபர் ட்வீட்.

வன்முறையை கைவிட்டு அமைதி காக்க வேண்டும் என்று மக்களை கேட்டுக்கொள்கிறேன் என அதிபர் ட்வீட்.

இலங்கையில் கடும் பொருளாதார வீழ்ச்சிக்கு அரசே காரணம், இதனால் கோட்டாபய அரசு மற்றும் மகிந்த ராஜபக்சே பதவி விலக வேண்டும் என கூறி கடும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில், நேற்றைய தினம் மகிந்த ராஜபக்சே தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். இதனைத்தொடர்ந்து இலங்கை முழுவதும் ஒரு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. தொடர் மக்கள் போராட்டத்தில் வன்முறை வெடித்துள்ளதால், சில இடங்களில் துப்பாக்கிசூடு, தீ வைப்பு உள்ளிட்ட சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இதன் காரணமாக அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

இந்த நிலையில், இலங்கையில் மக்கள் அமைதி காக்குமாறும், வன்முறையை நிறுத்துமாறும் அந்நாட்டு அதிபர் கோட்டாபய ராஜபக்சே வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுல கோட்டாபய ராஜபக்சே, வன்முறையை கைவிட்டு அமைதி காக்க வேண்டும் என்று மக்களை கேட்டுக்கொள்கிறேன். ஒருமித்த கருத்து மூலம் அரசியல் நிலைத் தன்மையை ஏற்படுத்த அனைத்து முயற்சிகளும் எஎடுக்கப்படும் என்றும் பொருளாதார நெருக்கடியை தீர்க்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் எனவும் கூறியுள்ளார். கொழும்புவில் போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறை நாடு முழுவதும் பரவியதை தொடர்ந்து, அதிபர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.