Tag: SriLankaViolence

புதிய பிரதமர் நியமனம் எப்போது? – இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு சமையல் எரிவாயு, எரிபொருள் மற்றும் மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் பற்றாக்குறை மற்றும் விலை அதிகரிப்பால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் வாழ இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது.இதனால்,பொருளாதார நெருக்கடிக்கு காரணமான அதிபர் கோத்தபய ராஜபக்சேவும்,பிரதமர் மஹிந்த ராஜபக்சேவும் பதவி விலக வேண்டும் என்று கூறி மக்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்தனர். இதனைத் தொடர்ந்து,பல பகுதிகளில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து பிரதமர் பதவியில் இருந்து நேற்று முன்தினம் மஹிந்த ராஜபக்ச […]

#GotabayaRajapaksa 6 Min Read
Default Image

இலங்கையில் காலி முகத் திடலை விட்டு வெளியேற காவல்துறை உத்தரவு!

இலங்கையில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் தொடரும் நிலையில், அமைதியை நிலைநாட்ட காவல்துறை நடவடிக்கை. இலங்கையில் அதிபர் கோட்டாபய ராஜபக்சேவுக்கு எதிராக காலி முகத் திடலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் வெளியேற காவல்துறை உத்தரவிட்டுள்ளது. பொது இடங்களில் மக்கள் ஒன்று கூடுவதற்கு எழுத்துபூர்வமான உத்தரவை பெற வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் முக்கியமான இடமாக காலி முகத் திடல் பார்க்கப்படுகிறது. அங்கு மக்கள் தொடர்ந்து குவிந்து வருவதால் […]

SriLankaEconomicCrisis 3 Min Read
Default Image

#Breaking:மகிந்த ராஜபக்சேவை கடற்படை தளத்துக்கு அழைத்து சென்றது ஏன்? – பாதுகாப்பு செயலாளர் முக்கிய தகவல்!

இலங்கையில் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணமான அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் அவரது சகோதரர் மகிந்த ராஜபக்சே அரசைக் கண்டித்து கடும் போராட்டம் நிலவி வரும் நிலையில்,நேற்று முன்தினம் தனது பதவியை மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்தார்.பின்னர்,அவரது மாளிகையில் தங்கியிருந்தபோது, அரசுக்கு எதிரானவர்கள் கடுமையான போராட்டங்களை மேற்கொண்டனர். மேலும்,அவரது மாளிகையின் உள்ளே நுழைய முயற்சியும் செய்த ஆர்பாட்டக்காரர்களால் நுழைய முடியவில்லை.இதனால்,அங்கிருந்து நேற்று அதிகாலை ராஜபக்சே வெளியேறி,தற்போது திருகோணமலையில் உள்ள கடற்படை முகாமில் பாதுகாப்புக்கு மத்தியில் தங்கி இருப்பதாக கூறப்படுகிறது. […]

#MahindaRajapaksa 5 Min Read
Default Image

#BREAKING: இலங்கையில் பெட்ரோல், டீசல் விற்பனை நிறுத்தம்!

இலங்கையில் எரிபொருள் விற்பனையை தற்காலிகமாக நிறுத்தி பெட்ரோலியத்துறை நடவடிக்கை. இலங்கையில் அசாதாரண சூழல் நிலவி வரும் நிலையில், பெட்ரோல், டீசல் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது என அறிவிப்பு வெளியாகியுள்ளது. பல இடங்களில் பொது சொத்துக்களை எரிக்க பெட்ரோல், டீசல் பயன்படுத்தப்படும் என்ற நிலையில், இதன் காரணமாக எரிபொருள் விற்பனையை தற்காலிகமாக நிறுத்தி பெட்ரோலியத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இலங்கை அரசுக்கு எதிராக மக்கள் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்த போராட்டத்தில் வன்முறைகள் வெடித்துள்ளது. இதனால், அரசியல் தலைவர்கள் வீடுகளுக்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் […]

petrolanddiesel 3 Min Read
Default Image

#JustNow: கடலோர பகுதிகளில் உஷாராக இருங்கள் – தமிழகத்துக்கு, மத்திய அரசு எச்சரிக்கை!

இலங்கையில் சாதாரண சூழல் நிலவி வரும் நிலையில், தமிழக கடலோர பகுதிகளில் தீவிர கண்காணிப்பை மேற்கொள்ள மத்திய அரசு உத்தரவு. இலங்கையில் கடும்  பொருளாதார நெருக்கடி காரணமாக அந்நாட்டு அரசு பதவி விலக வேண்டும் என கூறி மக்கள் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளது. மக்கள் போராட்டம் தீவிரம் காரணமாக நேற்று முன்தினம் மகிந்த ராஜபக்சே தனது பிரதமர் பதவியை ராஜ்ஜியமா செய்திருந்தார். இதன்பின்னரும், அதிபர் பதவி விலக வேண்டும் என மக்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த […]

#CentralGovt 6 Min Read
Default Image

BREAKING: மக்கள் அமைதி காக்க வேண்டும் – அதிபர் கோட்டாபய ராஜபக்சே ட்வீட்

வன்முறையை கைவிட்டு அமைதி காக்க வேண்டும் என்று மக்களை கேட்டுக்கொள்கிறேன் என அதிபர் ட்வீட். இலங்கையில் கடும் பொருளாதார வீழ்ச்சிக்கு அரசே காரணம், இதனால் கோட்டாபய அரசு மற்றும் மகிந்த ராஜபக்சே பதவி விலக வேண்டும் என கூறி கடும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில், நேற்றைய தினம் மகிந்த ராஜபக்சே தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். இதனைத்தொடர்ந்து இலங்கை முழுவதும் ஒரு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. தொடர் மக்கள் போராட்டத்தில் வன்முறை வெடித்துள்ளதால், […]

#GotabayaRajapaksa 4 Min Read
Default Image

#JustNow: இலங்கை வன்முறை – ஐ.நா. கண்டனம்!

இலங்கையில் நடைபெறும் வன்முறை சம்பவங்களுக்கு ஐ.நா. மனித உரிமை ஆணையம் கண்டனம். இலங்கையில் நடைபெற்று வரும் வன்முறைக்கு ஐ.நா மனித உரிமை ஆணையத்தின் தலைவர் மிச்செல் பச்லெட் கண்டனம் தெரிவித்துள்ளார். இலங்கையில் மேற்கொண்டு வன்முறை சம்பவங்கள் நடைபெறாமல் அமைதியை ஏற்படுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அரசுக்கு எதிராக மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த போராட்டத்தில் சில இடங்களில் வன்முறை வெடித்தது. இந்த நிலையில் வன்முறைக்கு ஐ.நா. மனித […]

#MahindaRajapaksa 3 Min Read
Default Image

#BREAKING: இலங்கையில் வன்முறை.. வெளிநாடு தப்பியோட ராஜபக்சே குடும்பம் திட்டம்!

ராஜபக்சே குடும்பத்தினர் நாட்டைவிட்டு வெளியேற கூடாது என்று பொதுமக்கள் முழக்கம். இலங்கையில் பரபரப்பான சூழ்நிலையில், இலங்கை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே மற்றும் அவரது குடும்பத்தினர் திருகோணமலை கடற்படை தளத்தில் உள்ளதால் அங்கு மக்கள் குவிந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. வன்முறைக்கு மத்தியில் வெளிநாடு தப்பியோட ராஜபக்சே குடும்பம் திட்டமிட்டு இருப்பதால், பொதுமக்கள் கடற்படை முகாமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ராஜபக்சே நாட்டைவிட்டு வெளியேற கூடாது என மக்கள் முழக்கமிட்டு வருவதாக கூறப்படுகிறது. நேற்று தனது […]

#MahindaRajapaksa 4 Min Read
Default Image