நியூசிலாந்தில் பிறந்தது 2021 புத்தாண்டு – வாணவேடிக்கைகளுடன் மக்கள் உற்சாகம்.!

The New Year 2021 was born in New Zealand and the public enthusiastically welcomed the New Year with fireworks.

நியூசிலாந்து நாட்டில் 2021 புத்தாண்டு பிறந்தது, வாணவேடிக்கையுடன் பொதுமக்கள் புது வருடத்தை உற்சாகத்துடன் வரவேற்றனர்.

உலகம் முழுவதும் புது வருடத்தை வரவேற்க காத்திருக்கும் நிலையில், முதலாவது நாடாக நியூசிலாந்தில் 2021 புத்தாண்டு பிறந்தது. ஆக்லாந்தில் 2021 புத்தாண்டை மக்கள் வாணவேடிக்கையுடன் மகிழ்ச்சியுடன் வரவேற்று கொண்டாடினர். இரவில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சாலைகளில் பொதுமக்கள் ஆடல், பாடல் என கோஷமிட்டு உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

இதையடுத்து ஆஸ்திரேலியாவில் புத்தாண்டு பிறக்க உள்ளது. குறிப்பாக இந்தியாவில் இன்னும் சில மணி நேரங்களில் புத்தாண்டு பிறக்க இருக்கும் நிலையில், மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

unknown node