2021- ஆங்கில புத்தாண்டையொட்டி தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் ரூ.159 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு வரும் ஜனவரி மாதம் 31 ஆம் தேதி வரை ஏற்கனவே உள்ள தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ளது என்று தமிழகஅரசு நேற்று அறிவித்திருந்தது. அதேசமயம் கொரோனா நோய்க்கட்டுப்பாட்டுப் பகுதிகளில் எந்தத் தளர்வுகளும் இல்லை எனவும் குறிப்பிட்டிருந்தது. இதனிடையே, தமிழகத்தில் நேற்று முதல் டாஸ்மாக் பார்களை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், 50 சதவீத இருக்கைகளில் மட்டும் வாடிக்கையாளர்களை அனுமதிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. […]
பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் நாட்டு மக்களுக்கு 2021 புத்தாண்டு வாழ்த்துக்களை தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர். உலகம் முழுவதும் 2021-ஆம் ஆண்டு புத்தாண்டை வண்ணவிளக்குகள், வாண வேடிக்கைகளுடன் மக்கள் உற்சகமாக கொண்டாடி வருகின்றனர். இந்தியாவிலும் புத்தாண்டை சிறப்பாக கொண்டாடி வருகிறார்கள். புது வருட பிறப்பை பலரும் இந்த வருடம் இனிய வருடமாக இருக்கட்டும் என்று வாழ்த்துக்கள் தெரிவித்தும், மலர்க்கொத்து வழங்கியும் பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில், பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளை தனது ட்விட்டர் […]
நியூசிலாந்தை தொடர்ந்து ஆஸ்திரேலியாவிலும் 2021 பிறந்தது – வான வேடிக்கைகளுடன் உற்சாகமாக புத்தாண்டை வரவேற்ற மக்கள். உலகிலேயே முதலாவது நாடாக நியூசிலாந்தில் இன்று மாலை சுமார் இந்திய நேரப்படி 4.20 க்கு 2021 புத்தாண்டு பிறந்தது. ஆக்லாந்தில் 2021 புத்தாண்டை மக்கள் வாணவேடிக்கையுடன் மகிழ்ச்சியுடன் வரவேற்று கொண்டாடினர். இரவில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சாலைகளில் பொதுமக்கள் ஆடல், பாடல் என முழக்கங்களையிட்டு உற்சாகத்துடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், தற்போது நியூசிலாந்தை தொடர்ந்து ஆஸ்திரேலியாவிலும் 2021 புத்தாண்டு பிறந்தது. […]
நியூசிலாந்து நாட்டில் 2021 புத்தாண்டு பிறந்தது, வாணவேடிக்கையுடன் பொதுமக்கள் புது வருடத்தை உற்சாகத்துடன் வரவேற்றனர். உலகம் முழுவதும் புது வருடத்தை வரவேற்க காத்திருக்கும் நிலையில், முதலாவது நாடாக நியூசிலாந்தில் 2021 புத்தாண்டு பிறந்தது. ஆக்லாந்தில் 2021 புத்தாண்டை மக்கள் வாணவேடிக்கையுடன் மகிழ்ச்சியுடன் வரவேற்று கொண்டாடினர். இரவில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சாலைகளில் பொதுமக்கள் ஆடல், பாடல் என கோஷமிட்டு உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். இதையடுத்து ஆஸ்திரேலியாவில் புத்தாண்டு பிறக்க உள்ளது. குறிப்பாக இந்தியாவில் இன்னும் சில மணி […]
கொரோனா தொற்றால் நிறுத்தப்பட்ட ரயில் சேவைகள் சில மாதங்களுக்குப் பிறகு புது தில்லி-கத்ரா பாதையில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ஜனவரி 1 முதல் மீண்டும் தனது சேவைகளைத் தொடங்கபடுகிறது. மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் ட்விட்டர் பக்கத்தில்,” பக்தர்களை வைஷ்ண தேவி சன்னதிக்கு அழைத்துச் செல்லும் டெல்லி-கத்ரா வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ஜனவரி 1 முதல் மீண்டும் தனது சேவைகளைத் தொடங்கும். இந்தியாவின் நவீன ரயில்களில் ஒன்று மீண்டும் பக்தர்களையும் வரவேற்கத் தயாராக உள்ளது என்று […]
புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு முன்னதாக மங்களூரு நகரில் 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. கர்நாடகா: கொரோனா வைரஸ் தொற்று மேலும் பரவுவதைத் தடுக்கும் வகையில், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு முன்னதாக மங்களூரு நகரில் 144 தடை விதிக்கப்பட்டுள்ளது. மங்களூரு நகர போலீஸ் கமிஷனர் விகாஷ் குமார் மற்றும் மங்களூரு நகரத்தின் கூடுதல் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் இந்த தடை உத்தரவுகள் இன்று மாலை 6 மணி முதல் 2021 ஜனவரி 1 ஆம் தேதி காலை 6 மணி வரை […]
புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகளை சென்னை காவல்துறை வித்துள்ளது. நாளை மறுநாள் ஜனவரி 1-ம் தேதி புத்தாண்டு தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் வழக்கமாக அதனை சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, சென்னையில் உள்ள நட்சத்திர விடுதி மதுபான பார்களை நாளை இரவு 10 மணியுடன் மூட காவல்துறை உத்தரவுவிட்டுள்ளது. அந்த வகையில், மெரினா உள்ளிட்ட கடற்கரை சாலைகள் […]
கர்நாடகாவில் இன்று முதல் ஜனவரி 2-ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அம்மாநில முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார். இங்கிலாந்தில் கடந்த சில நாட்களாக புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதால், லண்டன் உள்பட முக்கிய நகரங்களில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்காரணமாக இங்கிலாந்தில் இருந்து இந்தியாவுக்கு வரும் விமானங்களுக்கு 31-ம் தேதி வரை தடை விதித்தது மத்திய அரசு. இந்நிலையில், கர்நாடக முதல்வர் எடியூரப்பா கூறுகையில், இங்கிலாந்தில் இருந்து கடந்த […]
கடற்கரை மற்றும் சாலைகளில் புத்தாண்டு கொண்டாட அனுமதியில்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதுகுறித்து தமிழக அரசின் அறிவிப்பில், அனைத்து கடற்கரைகளிலும், சாலைகளிலும் 2021 புத்தாண்டு கொண்டாட அனுமதி இல்லை என்றும் டிசம்பர் 31 நள்ளிரவு மற்றும் ஜனவரி 1-ஆம் தேதி பொதுமக்கள் கடற்கரையில் அனுமதிக்க மாட்டார்கள் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் அந்த அறிவிப்பில், தாங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகளில் உணவகம் மட்டும் வழக்கம்போல் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு கொண்டாடத்தால் மக்கள் அதிகளவில் […]