மும்பை : இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வந்த மூன்று போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரை நியூசிலாந்து அணி ஏற்கனவே கைப்பற்றியது. இந்த நிலையில், 3 வது டெஸ்ட் போட்டியானது நேற்று முன்தினம் அதாவது நவம்பர் 1ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்த போட்டியில் தொடக்கத்தில் நியூசிலாந்தின் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. அதன்படி, நியூசிலாந்து அணி தங்களது முதல் இன்னிங்ஸ்க்கு 235 ரன்கள் சேர்த்தது. அதன்பின், இந்திய அணி தங்களது முதல் இன்னிங்ஸில் வெறும் […]
சென்னை : ஆப்கானிஸ்தான்-நியூஸிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற இருந்த டெஸ்ட் போட்டியானது டாஸ் கூட போடாமல் ஒரு கைவிடப்பட்டுள்ளது. இது டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் கைவிடப்பட்ட 8-வது போட்டியாகும். இந்த சம்பவம் கிரிக்கெட் வரலாற்றில் வரலாறு படைத்துள்ளது. ஆப்கானிஸ்தான் மண்ணில் பாதுகாப்பு காரணமாக எந்த ஒரு கிரிக்கெட் போட்டிகளும் நடைபெறுவதில்லை. அதனால், ஆப்கானிஸ்தானில் நடைபெற இருக்கும் சுற்றுப்பயணத் தொடரை இந்தியாவில் நடத்தி வருகின்றனர். அதற்கு இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐயும் உதவி செய்து வருகிறது. இந்த நிலையில் […]
லாக்கி பெர்குசன்: டி20 போட்டிகளில் சாதனையை முறியடிப்பதை பார்த்தாலே பார்ப்பதற்கு நன்றாக இருக்கும், அதே போல புதிய சாதனை நிகழ்த்தினால் கிரிக்கெட் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். தற்போது அதே போல ஒரு சாதனையை தான் பெர்குசன் நிகழ்த்தி உள்ளார். நேற்று நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரின் லீக் போட்டியில் நியூஸிலாந்து அணியும், பப்புவா நியூ கினி அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடியது. இதனால் முதலில் […]
நியூஸிலாந்து அணியின் டெஸ்ட் போட்டிகளில் சிறந்து விளங்கிய நீல் வாக்னர் தற்போது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார். நியூஸிலாந்து அணிக்காக இவர் 12 வருட காலமாக டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறார். மொத்தம் 64 டெஸ்ட் போட்டிகளில் நியூஸிலாந்து அணிக்காக விளையாடி, 260 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். இவர் தற்போது, தனது 37-வது வயதில் ஓய்வை அறிவித்துள்ளார். கடந்த 2021 ஜூன் மாதம் நடைபெற்ற டெஸ்ட் உலகக்கோப்பையின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணியை 8 விக்கெட் […]
உலக நாடுகளின் ஊழல் விகிதத்தை பொறுத்து மதிப்பெண்கள் வழங்கி, தரவரிசை படடியலை (2023 Corruption Perceptions Index (CPI)) சர்வதேச அமைப்பான டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது. அதில் ஊழல் இல்லாத நாட்டின் அதிகபட்ச மதிப்பெண் 100 என கணக்கிடப்பட்டுள்ளது. எந்த நாடு அதிக மதிப்பெண் எடுத்துள்ளதோ அது முதலிடம் பிடிக்கும். மொத்தம் 180 நாடுகள் இந்த தரவரிசை பட்டியலில் கணக்கிடப்பட்டுள்ளன. பிரதமர் மோடியிடம் மன்னிப்பு கேளுங்கள்.. எதிர்க்கட்சி தலைவர் வலியுறுத்தல்..! ஊழல் தரவரிசையில் 100க்கு […]
டி-20 உலகக்கோப்பையில் நியூசிலாந்து-அயர்லாந்து ஆட்டத்தில் நியூசிலாந்து அணி, 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி. ஆஸ்திரேலியாவில் எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர்-12 போட்டிகள் நடைபெற்று வருகிறது. அடிலெய்டில் நடைபெறும் இன்றைய போட்டியில் நியூசிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகள் மோதியது. டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக வில்லியம்சன்(61), பின் ஆலன்(32) ரன்கள் […]
டி-20 உலகக்கோப்பையில் நியூசிலாந்து-அயர்லாந்து ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 185 ரன்கள் குவிப்பு. ஆஸ்திரேலியாவில் எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர்-12 போட்டிகள் நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் நியூசிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகள் அடிலெய்டில் விளையாடி வருகின்றன. இரு அணிகளுக்கும் இது சூப்பர்-12இல் கடைசி போட்டி, மேலும் நியூசிலாந்து அணி இன்றைய போட்டியில் வென்று அரையிறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பை உறுதி செய்யும் முனைப்பில் களமிறங்கும். அயர்லாந்து அணிக்கு இன்றைய போட்டியில் வென்றாலும் மற்ற அணிகளின் […]
டி-20 உலகக்கோப்பையில் நியூசிலாந்துக்கு எதிராக இங்கிலாந்து அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர்-12 போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி அதிரடியாக ஆடி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 179 குவித்தது. அதிகபட்சமாக பட்லர் 73 ரன்களும், ஹேல்ஸ் 52 ரன்களும் குவித்தனர். நியூசிலாந்து அணி சார்பில் லாக்கி பெர்குசன் 2 விக்கெட்கள் வீழ்த்தினார். 180 ரன்கள் வெற்றி இலக்குடன் […]
டி-20 உலகக்கோப்பையில் இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் குவித்துள்ளது. ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர்-12 போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி அதிரடியாக ஆடி ரன்கள் குவித்தது. 20 ஓவர்கள் முடிவில் பட்லர் மற்றும் ஹேல்ஸ் அதிரடியுடன் 179 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக பட்லர் 73 ரன்களும், ஹேல்ஸ் 52 ரன்களும் குவித்தனர். நியூசிலாந்து அணி சார்பில் லாக்கி பெர்குசன் […]
நியூசிலாந்து மற்றும் வங்கதேசத்துக்கு எதிராக விளையாடும் இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. நியூசிலாந்துக்கான டி-20 அணியை ஹர்டிக் பாண்டியா வழிநடத்துகிறார். ரிஷாப் பந்த் துணை கேப்டனாகவும், உம்ரான் மாலிக், ஷுப்மன் கில், ஷ்ரேயஸ் ஐயர், சஞ்சு சாம்சன் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். ஒருநாள் அணிக்கு ஷிகர் தவான் கேப்டனாகவும், ரிஷாப் பந்த் துணை கேப்டனாகவும் இடம் பெற்றுள்ளனர். டி-20 இந்திய அணி: ஹர்திக் பாண்டியா (C), ரிஷப் பந்த் (VC & W), ஷுப்மன் கில், இஷான் […]
டி-20 உலகக்கோப்பையில் இலங்கைக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் குவித்துள்ளது. எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர்-12 போட்டியில் சிட்னியில் இலங்கைக்கு எதிராக நியூசிலாந்து அணி இன்று விளையாடி வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணியில் முன்னணி பேட்ஸ்மேன்கள் சொதப்பிய நிலையில் கிளென் பிலிப்ஸ் தனியாக போராடி சதமடித்தார். 20 ஓவர்களில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் குவித்துள்ளது. அதிகபட்சமாக […]
டி-20 உலகக்கோப்பை தொடரில் நியூசிலாந்து-ஆப்கானிஸ்தான் போட்டி மழையால் ஆட்டம் கைவிடப்பட்டது. ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர்-12 போட்டிகள் நடைபெற்று வருகிறது. மெல்போர்னில் இன்று நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாட இருந்தது. ஆனால் தற்போது மெல்போர்னில் பெய்து வரும் மழை காரணமாக ஆட்டம் டாஸ் கூட போடாமல் ரத்து செய்யப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. முன்னதாக மெல்போர்னில் இன்று நடந்த முதல் ஆட்டத்தில் டக்வர்த் லூயிஸ் முறைப்படி அயர்லாந்து அணி […]
டி-20 உலகக்கோப்பையில் சூப்பர்-12 போட்டியின் முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர்-12 போட்டிகள் இன்று தொடங்கியது. சிட்னியில் நடந்த முதல் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீசியது. அதன்படி முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி அதிரடி காட்டியது. 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் […]
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதவிருந்த பயிற்சியாட்டம் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் எட்டாவது சீசன் தற்போது ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. தகுதி சுற்று போட்டிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் சூப்பர்-12 போட்டிகள் அக்-22ஆம் தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்கு முன்னதாக இந்தியா 2 பயிற்சி போட்டிகளில் விளையாடுகிறது. முதல் பயிற்சிபோட்டியில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வென்றிருந்தது. இந்த நிலையில் இரண்டாவது பயிற்சி போட்டி […]
2027 ஆம் ஆண்டு முதல் 14 வயதிற்கு கிழே உள்ளவர்கள் சிகெரெட் வாங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த தடை 2073 வரை அவர்களுக்கு தொடரும் என கூறப்படுகிறது. நியூசிலாந்தில் சிகெரெட் பிடிப்பவர்களுக்கு எதிராக பல்வேறு நடைவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன. அதிலும், குறிப்பாக சிகெரெட் பிடிப்பவர்களை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகளை கொண்டு வரவுள்ளது. அந்நாட்டில் ஏற்கனவே 18 வயதிற்கு உட்பட்டவர்கள் சிகெரட் பிடிப்பதை தடை செய்கிறது. அதன் மூலம் வெறும் 5 % மட்டுமே வருடத்திற்கு சிகெரெட் […]
பாகிஸ்தான் – நியூசிலாந்து இடையேயான ஒருநாள், டி20 தொடர் பாதுகாப்பு காரணங்களுக்காக முழுமையாக ரத்து என அறிவிப்பு. பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாட திட்டமிடப்பட்டது. இந்த நிலையில், பயங்கரவாத தாக்குதல் அச்சுறுத்தல் காரணமாக பாகிஸ்தானில் விளையாட சென்ற நியூசிலாந்து கிரிக்கெட் அணி அவசரமாக நாடு திரும்புகிறது. பாகிஸ்தானின் ராவல்பிண்டி மைதானத்தில் இன்று ஒருநாள் போட்டி தொடங்க இருந்த நிலையில், நியூசிலாந்து அரசு எச்சரிக்கையால் போட்டி ரத்து […]
நியூசிலாந்தில் இந்தியர் ஒருவர் வீட்டை நகர்த்த முடியாமல் திண்டாட்டம். நஷ்டயீடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு பதிவு. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நியூசிலாந்தர் தீபக் லால் தனது வீடு தவறான இடத்தில் கட்டப்பட்டதால் ஒரு மீட்டர் தூரம் நகர்த்தி தர வேண்டும் அல்லது நியூசிலாந்து டாலரில் 315,000 (இந்திய ரூபாயில் 1.65 கோடி) நஷ்டயீடு கேட்டு வழக்கு பதிவு செய்துள்ளார். அதாவது லால் கடந்த ஆண்டு, நியூசிலாந்தில் உள்ள பாபகுரா பகுதியில் தனது வீட்டை வடிவமைத்து கட்ட ‘பினாகில் […]
நியூசிலாந்து அணி ஐசிசி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் 118 ரேட்டிங் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளது. நியூசிலாந்து – பாகிஸ்தான் இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது. பே ஓவலில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 101 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. கேப்டன் கேன் வில்லியம்சன், ஆட்ட நாயகன் விருதை தட்டி சென்றார். இந்த வெற்றியால் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் 117 மதிப்பீடுகளுடன் நியூசிலாந்து முதலிடத்துக்கு […]
நியூசிலாந்து நாட்டில் 2021 புத்தாண்டு பிறந்தது, வாணவேடிக்கையுடன் பொதுமக்கள் புது வருடத்தை உற்சாகத்துடன் வரவேற்றனர். உலகம் முழுவதும் புது வருடத்தை வரவேற்க காத்திருக்கும் நிலையில், முதலாவது நாடாக நியூசிலாந்தில் 2021 புத்தாண்டு பிறந்தது. ஆக்லாந்தில் 2021 புத்தாண்டை மக்கள் வாணவேடிக்கையுடன் மகிழ்ச்சியுடன் வரவேற்று கொண்டாடினர். இரவில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சாலைகளில் பொதுமக்கள் ஆடல், பாடல் என கோஷமிட்டு உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். இதையடுத்து ஆஸ்திரேலியாவில் புத்தாண்டு பிறக்க உள்ளது. குறிப்பாக இந்தியாவில் இன்னும் சில மணி […]
இந்தியாவில் பிறந்த பிரியங்கா ராதாகிருஷ்ணன் பள்ளி படிப்பிற்காக சிங்கப்பூர் சென்று தற்போது நியூசிலாந்து நாட்டின் முதல் இந்திய வம்சாவளி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியாவை சேர்ந்த பெண்ணை நியூசிலாந்தின் அமைச்சராக அறிவிப்பது இதுவே முதல் முறையாகும். நியூசிலாந்தின் பிரதம மந்திரி ஜசிந்தா ஆர்டெர்ன் ஐந்து புதிய அமைச்சர்களை நியமித்ததில் பிரியங்கா ராதாகிருஷ்ணனும் ஒருவர். திருமதி.ராதாகிருஷ்ணன் வீட்டு வன்முறையில் இருந்து தப்பிப்பிழைத்த பெண் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் – உள்ளிட்ட பெரும்பாலும் கேட்கப்படாத மக்களின் குரல்களுக்காக வாதாட தனது பணி […]