வான்வழி தாக்குதலில் ஈடுபட்ட ஆப்கான் படைகள் – 200 தலிபான்கள் உயிரிழப்பு!

At least 200 Taliban militants have been killed in an airstrike by Afghan forces, according to the Afghan Defense Ministry.

ஆப்கான் படையினர் நடத்திய வான்வழி தாக்குதலில் 200 தலிபான்கள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளின் தாக்குதல் அவ்வப்போது தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இந்நிலையில் ஆப்கானிஸ்தான் பாதுகாப்புத்துறை அந்நாட்டில் உள்ள தாலிபான்களை ஒடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. நேற்று ஆப்கானிஸ்தான் செபேர்கன் பகுதியில் தலிபான்கள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், ஆப்கானிஸ்தான் விமானப்படை அதிரடியாக அவ்விடத்தில் தாக்குதல் நடத்தியுள்ளது.

இதன் காரணமாக 200 தலிபான்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சகம் கூறுகையில், செபேர்கன் நகரில் பதுங்கியிருந்த ஆப்கான் தலிபான்கள் மீது விமானப் படை நடத்திய தாக்குதலில் 200 தலிபான்கள் கொல்லப்பட்டதாகவும், தலிபான்களின் ஆயுதங்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் கண்டெடுக்கப்பட்டு அழித்து நாசமாக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.