ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு பல்கலைக்கழக கல்வியை தலிபான்கள் தடை செய்துள்ளதை எதிர்த்து, மர்வா என்ற ஆப்கானிய மாணவி தனது ஆதங்கத்தை உலகிற்கு தெரிவித்துள்ளார். தலிபான்கள் பெண்களை தலை துண்டிக்க உத்தரவிட்டிருந்தால், அதுவும் இந்த தடையை விட சிறப்பாக இருந்திருக்கும்.அவள் மேலும், “உலகில் நான் இருப்பதற்காக வருந்துகிறேன். “நாங்கள் விலங்குகளை விட மோசமாக நடத்தப்படுகிறோம், விலங்குகள் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம், ஆனால் பெண்களான எங்களுக்கு எங்கள் வீட்டை விட்டு வெளியேற கூட உரிமை இல்லை.” மர்வா தான் அவரது குடும்பத்தில் […]
ஆப்கானிஸ்தான் மருத்துவமனையில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு ஐஎஸ் அமைப்பின் கோராசான் பிரிவு பொறுப்பேற்றுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் இருந்த அமெரிக்க இராணுவப் படைகள் முழுவதும் வெளியேறியதை தொடர்ந்து பல்வேறு வன்முறை சம்பவங்களில் அங்கு அடிக்கடி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள சர்தார் முகமது தாவுத் கான் எனும் ராணுவ மருத்துவமனையில் நேற்று பயங்கர தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலின் போது […]
காபூல் மசூதி அருகே குண்டுவெடிப்பு நிகழ்வில் பல பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக தலிபான் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் ஆட்சி புரிந்து வரும் தலிபான்கள்,எல்லைகளுக்கு குறிப்பாக பதாக்ஷான் மாகாணத்தில் தற்கொலை படையை உருவாக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை உறுதி செய்யும் வகையில்,தற்கொலை படைக்கு லஷ்கர்-இ-மன்சூரி (‘மன்சூர் இராணுவம்’) என்று பெயரிடப்பட்டு,நாட்டின் எல்லைகளுக்கு அனுப்பப்படும் என்று பதாக்ஷான் மாகாணத்தின் துணை ஆளுநர் முல்லா நிசார் அஹ்மத் அஹ்மதி முன்னதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில்,ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ஈத் காஹ் மசூதியின் […]
ஆப்கானிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி அஷ்ரப் கனி,தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கம் நேற்று முதல் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார். முன்னதாக,ஆப்கானிஸ்தான் நாட்டில் அதிபர் அஷ்ரப் கனி தலைமையிலான ஆளும் அரசுக்கு எதிரான தொடர் தாக்குதலில் தாலிபான்கள் ஈடுபட்டு வந்தனர்.இதனையடுத்து,தலிபான்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றிய நிலையில், ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறியது. இதற்கிடையில்,ஆப்கானிஸ்தான் அதிபராக இருந்த அஷ்ரப் கனி ஆகஸ்ட் 15 அன்று காபூலை விட்டு வெளியேறினார்.பின்னர் கனி ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு தப்பிச் சென்றார்.மேலும்,லட்சக்கணக்கான ஆப்கன் மக்களும் […]
ஆப்கானிஸ்தான் ஊடகங்கள் ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பு செய்யக்கூடாது என்று தலிபான்கள் எச்சரித்துள்ளனர்.அதற்கான காரணம் இதுதான். உலகின் மிக இலாபகரமான மற்றும் முக்கியமான கிரிக்கெட் போட்டியான இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) போட்டிகளை ஆப்கானிஸ்தானில் ஒளிபரப்ப தலிபான்கள் தற்போது தடை விதித்துள்ளனர். ஐபிஎல் போட்டிகளில் இடம் பெறும் நடனம் மற்றும் அரங்கங்களில் பெண் பார்வையாளர்கள் இருப்பதை மேற்கோள் காட்டி ஆப்கானிஸ்தான் ஊடகங்கள் ஐபிஎல் ஒளிபரப்பப்படுவதற்கு எதிராக தலிபான்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இஸ்லாமிய கட்டமைப்பிற்குள் பெண்களின் உரிமைகள் மதிக்கப்படும் என்று […]
தலிபான்கள் ஆட்சியில் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என ஆப்கான் மகளிர் கால்பந்து அணி பாகிஸ்தானில் தஞ்சம் புகுந்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள நிலையில், அந்நாட்டில் உள்ள மக்கள் மற்றும் நாட்டிலிருந்த பிற நாட்டு மக்கள் அனைவரும் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறி வந்தனர். தற்போதும் ஆப்கானிஸ்தானில் இருக்கக்கூடிய பெண்களுக்கு உரிமைகள் மறுக்கப்பட்டு வரும் நிலையில், பலரும் இதற்காக குரல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் உள்ள அந்நாட்டின் மகளிர் கால்பந்து அணியினர் தற்போது பாகிஸ்தானில் தஞ்சம் […]
ஆப்கானிலிருந்து வெளியேறிய பெண் பத்திரிகையாளர், தனது நாட்டை தான் நேசிப்பதாகவும், ஆனால் நான் பத்திரிகையாளர் என தெரிந்தால் என்னை கொன்று விடுவார்கள் எனவும் அழுதுள்ளார். ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள நிலையில், ஆப்கான் நாட்டை சேர்ந்த மக்கள் மற்றும் பிற நாட்டு மக்கள் தற்பொழுது ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறி வருகின்றனர். இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் பெண்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு எதிராக தாக்குதல்கள் நடைபெறுகிறது என அண்மையில் கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிய பெண் […]
ஆப்கானிலிருந்து இந்திய விமானப்படை விமானம் மூலமாக இந்தியா வந்திறங்கிய ஆப்கான் அமைச்சர் நரேந்திர சிங் கால்சா கண்ணீர் மல்க பேட்டி அளித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள நிலையில், ஆப்கான் நாட்டில் உள்ள மக்கள் பலரும் பிற நாடுகளுக்குள் அடைக்கலம் புகுந்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய விமானப்படை சிறப்பு விமானம் மூலமாக ஆப்கானிஸ்தானில் உள்ள இந்திய மக்கள் மற்றும் வெளியேற விரும்பக்கூடிய ஆப்கான் நாட்டினரும் மீட்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்திய விமானப்படை சிறப்பு விமானம் மூலமாக […]
ஆப்கான் பிரச்சனை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த போப் வலியுறுத்தல். ஆப்கானிஸ்தான் நாட்டில் அதிபர் அஷ்ரப் கனி தலைமையிலான ஆளும் அரசுக்கு எதிரான தொடர் தாக்குதலில் தாலிபான்கள் ஈடுபட்டு வந்த நிலையில், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை நேற்று தாலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து, ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினார்கள். இதனால், அங்கு தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது. இந்நிலையில், ஆப்கானில் நடைபெற்றுள்ள பிரச்சனை குறித்து, போப் பிரான்சிஸ் வேதனை தெரிவித்துள்ளதோடு, இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துமாறும் வலியுறுத்தியுள்ளார். வாடிகனில் […]
ஆப்கானிஸ்தானில் காபூல் விமான நிலையத்தில் இருந்து புறப்படும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டில் அதிபர் அஷ்ரப் கனி தலைமையிலான ஆளும் அரசுக்கு எதிரான தொடர் தாக்குதலில் தாலிபான்கள் ஈடுபட்டு வந்தனர்.இதனையடுத்து,ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை நேற்று தாலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த நிலையில், ஆட்சி அதிகாரத்தையம் கைப்பற்றினார்கள். இதனால்,அதிபர் அஷ்ரப் கனி ஆப்கானில் இருந்து வெளியேறிய நிலையில், ஆப்கானிஸ்தானில் போர் முடிவுக்கு வந்ததாக தாலிபான்கள் இன்று காலை அறிவித்தனர்.இதனால்,ஆட்சி பொறுப்பு தாலிபான்கள் வசம் […]
ஆப்கான் படையினர் நடத்திய வான்வழி தாக்குதலில் 200 தலிபான்கள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளின் தாக்குதல் அவ்வப்போது தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இந்நிலையில் ஆப்கானிஸ்தான் பாதுகாப்புத்துறை அந்நாட்டில் உள்ள தாலிபான்களை ஒடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. நேற்று ஆப்கானிஸ்தான் செபேர்கன் பகுதியில் தலிபான்கள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், ஆப்கானிஸ்தான் விமானப்படை அதிரடியாக அவ்விடத்தில் தாக்குதல் நடத்தியுள்ளது. இதன் காரணமாக 200 தலிபான்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்நாட்டின் பாதுகாப்புத் […]