அமெரிக்கா :அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் ஹெலிகாப்டர் ஒன்று வானொலி கோபுரத்தில் மோதி, வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில் தனியாருக்குச் சொந்தமான ராபின்சன் R44 என்கிற ஹெலிகாப்டரில் பயணம் செய்த குழந்தை உள்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அந்த ஹெலிகாப்டர் நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) மாலை ஹூஸ்டனில் உள்ள எலிங்டன் ஃபீல்ட் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ஹெலிகாப்டர் இடித்த உடன் தீப்பிடித்து, பயங்கர சத்தத்துடன் கீழே விழும் கோரமான விபத்தின் காட்சி இணையத்தில் பரவி வருகிறது. மேலும், விபத்து நடந்த இடத்தில் ஏற்பட்ட தீயை உடனடியாக அதிகாரிகள் அணைத்தனர்.
தற்பொழுது, இந்த விபத்து தொடர்பாக புலனாய்வாளர்கள் ஆய்வு செய்ய தொடங்கியுள்ளனர். மேலும் இதனை மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் விசாரணை மேற்கொள்ள உள்ளது.
