அமெரிக்கா : அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் ஹெலிகாப்டர் ஒன்று வானொலி கோபுரத்தில் மோதி, வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில் தனியாருக்குச் சொந்தமான ராபின்சன் R44 என்கிற ஹெலிகாப்டரில் பயணம் செய்த குழந்தை உள்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அந்த ஹெலிகாப்டர் நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) மாலை ஹூஸ்டனில் உள்ள எலிங்டன் ஃபீல்ட் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஹெலிகாப்டர் இடித்த உடன் தீப்பிடித்து, பயங்கர சத்தத்துடன் கீழே விழும் கோரமான விபத்தின் காட்சி இணையத்தில் […]
இதயத்தை கண்காணிக்க அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் ‘ஸ்மார்ட் சட்டை’ உருவாக்கியுள்ளனர். உடல் நலத்தில் அக்கறை உள்ளவர்கள் மற்றும் உடற்பயிற்சி ஆர்வலர்கள் இப்போது ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள் பயன்படுத்துவதை விரும்புகின்றனர். அமெரிக்காவின் டெக்சாஸின் ஹூஸ்டனில் உள்ள ரைஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஒரு நானோகுழாய் நூலை உருவாக்கி, அதை வழக்கமான ஆடைகளாக நெசவு செய்து ஸ்மார்ட் ஆடைகளாக மாற்றி ஸ்மார்ட் சட்டை உருவாக்கியுள்ளனர். இழைகள் உலோகக் கம்பிகளைப் போலவே கடத்தும் தன்மை கொண்டவை, ஆனால் ஒரு உடல் இயக்கத்தில் இருக்கும்போது கழுவக்கூடிய வாய்ப்பு […]
“Howdy Modi” நிகழ்ச்சியில் இந்திய பிரதமர் மோடியுடன் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பங்கேற்கிறார். ஐ.நா.பொதுசபையின் கூட்டம் வருகின்ற 17-ஆம் தேதி தொடங்குகிறது .இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்.இதற்காக அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொள்கிறார். இதனை தொடர்ந்து 22-ஆம் தேதி டெக்ஸாஸில் உள்ள ஹோஸ்டனில்(Houston) அமெரிக்க வாழ் இந்தியர்கள் ஏற்பாடு செய்துள்ள “Howdy Modi” நிகழ்ச்சியில் உரையாற்ற உள்ளார் பிரதமர் மோடி. இந்த கூட்டத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பங்கேற்பார் என்று தகவல் வெளியாகிவந்தது. […]