துருக்கியில் பேருந்து விபத்து – 14 பேர் பலி, 18 பேர் காயம்!

At least 14 people have been killed and 18 injured in a bus crash in Turkey.

துருக்கியில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் சிக்கி 14 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 18 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

துருக்கி நாட்டின் பாலிகேசிா் மாகாண நெடுஞ்சாலையில் பேருந்து ஒன்று பயணிகளுடன் சென்று கொண்டிருந்துள்ளது. அப்பொழுது திடீரென சாலையோர சரிவில் பேருந்து உருண்டு விழுந்துள்ளது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி மருத்துவமனையில் இருந்த மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது மருத்துவமனையில் 18 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இந்த விபத்தில் 14 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீஸ் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.