துருக்கி : தலைநகர் அங்காரா அருகே துருக்கியின் உயர்மட்ட பாதுகாப்பு நிறுவனம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டனர். மும்பைத் தாக்குதல் சம்பவம் போல நடந்த இந்த தீவிரவாத தாக்குதலில் 22 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதல் குறித்த தகவலின்பேரில் விரைந்து வந்து 2 தீவிரவாதிகளை துருக்கி பாதுகாப்புப் படை சுட்டுக் கொன்றது. இதனையடுத்து, இச்சம்பவத்தால் ஆத்திரமடைந்த துருக்கி, ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள குர்திஷ் பயங்கரவாதிகளின் 32 இடங்கள் மீது, பதிலடி கொடுக்கும் விதமாக நேற்று […]
கடந்த இரண்டு நாட்களில் 12 வீரர்கள் கொல்லப்பட்டதை அடுத்து, துருக்கி விமானப்படை வடக்கு ஈராக் மற்றும் சிரியாவில் வான்வழித் தாக்குதல்களை நடத்தியதுள்ளது. அண்டை நாடான ஈராக்கில் உள்ள PKK தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலின் ஒரு பகுதியாக துருக்கி தொடர்ந்து வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த நிலையில், வடக்கு ஈராக்கில் கடந்த இரண்டு நாட்களில் 12 வீரர்கள் கொல்லப்பட்டதை அடுத்து, துருக்கி விமானப்படை நேற்று (சனிக்கிழமையன்று) இரவு வடக்கு ஈராக் மற்றும் சிரியாவில் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. […]
துருக்கி நாட்டின் பெயரை துருக்கியே என்று மாற்றம் செய்ய ஐக்கிய நாடுகள் சபை ஒப்புதல் அளித்துள்ளது. துருக்கி நாட்டின் அதிபர் ரெசெப் தயிப் எர்டோகன், துருக்கி நாட்டின் பெயரை துர்க்கியே என மாற்றம் செய்யக்கோரி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அந்நாட்டு அரசாங்கத்தால் முடிவெடுக்க பட்டுள்ளது. அதனால் துருக்கி அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபையில் நாட்டின் பெயர் மாற்றம் குறித்து கோரிக்கை விடுத்தது. இதன் காரணம் உலக அளவில் துருக்கி நாட்டின் மதிப்பை அங்கீகரிக்கவே துருக்கியே என […]
துருக்கியில் உக்ரைன், ரஷ்யா இடையேயான அடுத்த கட்ட அமைதி பேச்சுவார்த்தை இன்று தொடங்குகிறது. கடந்த பிப்.24-ஆம் தேதி உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கையை மேற்கொள்ள ரஷ்ய அதிபர் உத்தரவிட்டதை தொடர்ந்து, தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த தொடர் தாக்குதலில் இருநாட்டை சேர்ந்த ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்ய படைகள் தொடுத்துள்ள போரால் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் பாதுகாப்பு தேடி உக்ரைனில் இருந்து வெளியேறி வருகின்றனர். உக்ரைன் – […]
ஐரோப்பிய மற்றும் ஆசியக் கரைகளை இணைக்கும் துருக்கி டார்டனெல்லஸ் ஜலசந்தியில் ஒரு நீளமான தொங்கு பாலம் நேற்று திறக்கப்பட்டது.இந்த பாலத்தை துருக்கி ஜனாதிபதி மற்றும் தென் கொரியாவின் பிரதமர் ஆகியோர் திறந்து வைத்தனர். இப்பாலம்,உலகின் மிக நீளமான தொங்கு பாலம் என்ற சிறப்பை பெற்றுள்ளது. இது தொடர்பாக,துருக்கி ஜனாதிபதி தாயீப் எர்டோகன் கூறுகையில்: “துருக்கியின் ஐரோப்பிய மற்றும் ஆசிய கடற்கரைகளை இணைக்கும், 1915 கேனகேல் பாலம் துருக்கிய மற்றும் தென் கொரிய நிறுவனங்களால் 2.5 பில்லியன் யூரோக்கள் […]
ரஷ்யா – உக்ரைன் இடையே ஏற்கனவே நடைபெற்ற இரண்டு கட்ட பேச்சுவார்த்தையில் எந்த உடன்படும் ஏற்படாததால், இன்று மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இதனால் ரஷ்யா-உக்ரைன் பிரதிநிதிகள் சந்திப்பு இன்னும் 2 மணி நேரத்திற்குள் தொடங்கும் என்றும் ரஷ்ய தூதுக்குழு தற்போது பெலாரஸில் காத்திருப்பதாக ரஷ்ய ஊடகம் தகவல் கூறியுள்ளது. இந்த நிலையில், ரஷ்யா – உக்ரைன் நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மார்ச் 10-ல் துருக்கியில் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். ரஷ்ய அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், உக்ரைன் […]
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்திய பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதித்துள்ளது துருக்கி அரசு. கொரோனா பரவல் உலக நாடுகளை பெருமளவு பாதித்து வருகிறது. இதனால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தடுப்பு நடவடிக்கைகளையும் உலக நாடுகள் முன்னெடுத்து வருகிறது. இந்நிலையில் தற்போது துருக்கி அரசு, இந்தியாவிலிருந்து வரும் பயணிகளுக்கு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. துருக்கி செல்லும் இந்திய பயணிகள் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்த சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். இந்த கட்டுப்பாடுகள் இந்திய பயணிகளுக்கும், பயண தேதிக்கு முன்னதாக 14 […]
துருக்கி நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 74 ஆக அதிகரித்துள்ளது. ஆகஸ்ட் 11 ஆம் தேதி அன்று துருக்கியில் உள்ள கருங்கடல் பகுதியில் கனமழை பெய்துள்ளது. இதனால் பார்டின், கஸ்டமோனு, சினோப் மற்றும் சம்சுன் ஆகிய இடங்களில் பெரிதளவு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு ஏற்பட்ட வெள்ளத்தில் வீடுகள், பாலம் உள்ளிட்டவை இடிந்து விழுந்துள்ளது. இதில் பல பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த வெள்ளத்தால் இதுவரை 74 பேர் உயிரிழந்துள்ளனர். காஸ்டமோனு […]
துருக்கி நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 44 ஆக அதிகரித்துள்ளது. கடந்த புதன்கிழமை அன்று துருக்கியில் உள்ள கருங்கடல் பகுதியில் கனமழை பெய்துள்ளது. இதனால் பார்டின், கஸ்டமோனு, சினோப் மற்றும் சம்சுன் ஆகிய இடங்களில் பெரிதளவு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு ஏற்பட்ட வெள்ளத்தில் வீடுகள், பாலம் உள்ளிட்டவை இடிந்து விழுந்துள்ளது. இதில் பல பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த வெள்ளத்தால் இதுவரை 44 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல் 2,250க்கும் மேற்பட்ட […]
துருக்கி நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது. கடந்த புதன்கிழமை அன்று துருக்கியில் உள்ள கருங்கடல் பகுதியில் கனமழை பெய்துள்ளது. இதனால் பார்டின், கஸ்டமோனு, சினோப் மற்றும் சம்சுன் ஆகிய இடங்களில் பெரிதளவு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு ஏற்பட்ட வெள்ளத்தில் வீடுகள், பாலம் உள்ளிட்டவை இடிந்து விழுந்துள்ளது. இதில் பல பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த வெள்ளத்தால் 27 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல் 1,700க்கும் மேற்பட்ட மக்களை […]
துருக்கியில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் சிக்கி 14 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 18 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். துருக்கி நாட்டின் பாலிகேசிா் மாகாண நெடுஞ்சாலையில் பேருந்து ஒன்று பயணிகளுடன் சென்று கொண்டிருந்துள்ளது. அப்பொழுது திடீரென சாலையோர சரிவில் பேருந்து உருண்டு விழுந்துள்ளது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி மருத்துவமனையில் இருந்த மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர். […]
துருக்கியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் 8 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 864 பேர் படுகாயமடைந்துள்ளனர். துருக்கியில் உள்ள மத்திய தரை கடல் மற்றும் ஏஜியன் பகுதிகளில் கடுமையான காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த தீயில் பலர் சிக்கிய நிலையில், 8 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்த துருக்கி நாட்டின் விவசாய மற்றும் வனத்துறை மந்திரி பெகிர் பக்டிமிர்லி அவர்கள் கூறுகையில், மானவ்காட் வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி ஏழு பேர், மர்மரிஸ் […]
வடக்கு சிரியாவில் 2 துருக்கிய வீரர்கள் கொல்லப்பட்டதாக துருக்கியின் பாதுகாப்பு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. துருக்கி ராணுவ கவச வாகனம் தாக்கப்பட்டு, இரண்டு வீரர்கள் உயிரிழந்துள்ளனர் மற்றும் இரண்டு வீரர்களை காயமடைந்துள்ளனர் என்று துருக்கியின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. துருக்கி எல்லைக்கும் வடக்கு அலெப்போவிற்கும் இடையிலான ஒரு பகுதியை உள்ளடக்கிய யூப்ரடீஸ் ஷீல்ட் பகுதியில் நேற்று இந்த தாக்குதல் நடந்தாக கூறப்படுகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ‘பயங்கரவாத’ இலக்குகளைத் தாக்கியதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. தாக்குதலில் […]
துருக்கியில் ஆயிரக்கணக்கான ப்ளமிங்கோ பறவைகள் உயிரிழந்துள்ள சம்பவம் பறவைகள் ஆர்வலர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. துருக்கியின் கொன்யா பகுதியில் இருக்கும் இரண்டாவது பெரிய ஏரியான டஸ் ஏரியில் வலசைப்பறவைகள் வந்து செல்வது வழக்கம். இந்த உவர் ஏரிக்கு வரக்கூடிய நீரை சிலர் அவர்களது பகுதிகளுக்கு திருப்பி கொண்டதால் வறண்டு கிடப்பதாக சுற்றுசூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். இதன் காரணத்தால் இந்த வறண்ட பகுதியில் ஆயிரத்திற்கும் அதிகமான பிளமிங்கோ பறவைகள் இறந்து கிடப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், செல்கக் பல்கலைக்கழகத்தின் […]
சிரியாவில் உள்ள மருத்துவமனையில் நடைபெற்ற இரு ஏவுகணை தாக்குதலில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். சிரியாவில் நடந்த ஏவுகணை தாக்குதல் குறித்து சிரியன் அமெரிக்க மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளதாவது: கடந்த சனிக்கிழமையன்று, சிரியாவில் அஃப்ரின் நகரத்தில் இருக்கும் அல்-ஷிபா மருத்துவமனையில் இரண்டு ஏவுகணை தாக்குதல் நடந்துள்ளது. இதில் அவசரகால பிரிவு அறை பாதிக்கப்பட்டுள்ளது. இதில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் உயிரிழந்தவர்களில் இருவர் மருத்துவப்பணியாளர்கள் மற்றும் இருவர் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள். இந்த தாக்குதலில் 11 பேர் காயமடைந்துள்ளனர். தாக்குதல் […]
யூரோ கோப்பை கால்பந்து போட்டி ஆறு பிரிவாக நேற்று நடைபெற்றுள்ளது. இதில் 3-0 என்ற கோல் கணக்கில் துருக்கியை இத்தாலி அணி வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. 24 நாடுகள் பங்கேற்க கூடிய ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டி நேற்று தொடங்கி நடைபெற்று உள்ளது. இத்தாலியின் ரோம் நகரில் நேற்று தொடங்கிய இந்த போட்டியில் 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு முதல் லீக் ஆட்டத்தில் குரூப் ஏ பிரிவில் துருக்கி மற்றும் இத்தாலி அணிகள் இடம் பிடித்துள்ளன. இடைவேளை நேரம் […]
துருக்கியில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதில் 11 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். கடந்த வியாழக்கிழமை துருக்கி நாட்டில் பிட்லிஸ் மாகாணத்தில் துருக்கி படைப்பிரிவை சேர்ந்த குழுவினர்கள் தங்கள் ராணுவத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டரில் வழக்கமான பயிற்சிக்காக சென்றுள்ளனர் .இவர்கள் குர்திஸ்தான் என்ற தனிநாடு உருவாக்க போராடுபவர்களை எதிர்கொள்ளும் ராணுவ படை வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.பயிற்சிக்கு சென்ற அந்த ஹெலிகாப்டரில் லெப்டினன்ட் ஜெனரல் உட்பட பல ராணுவ வீரர்கள் இருந்த நிலையில் ஹெலிகாப்டர் பிட்லிஸ் மாகாணத்திலிருந்து புறப்பட்ட அரை மணி […]
துருக்கியின் விவசாய கடன் கூட்டுறவுத் தலைவரான பஹ்ரெடின் பொய்ராஸ் மற்றும் உர உற்பத்தி நிறுவனமான குபெர்டாஸ் ஆகியோர் தங்க புதையலை கண்டுபிடித்துள்ளனர். துருக்கியில் மிகப் பெரிய தங்க புதையல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த தங்க புதையலின் எடை 99 டன் என்றும் தங்கத்தின் மதிப்பு ரூ.44,000 கோடி எனவும் கூறப்படுகிறது. உலகின் பல நாடுகளின், மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பை விட அதிகம் என்பது ஆச்சரியம். உர நிறுவனம் ஒன்று வாங்கிய நிலத்தில் இந்த தங்க புதையலை கண்டுபிடித்துள்ளனர். […]
துருக்கி நிலநடுக்கத்தில் 4 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்கப்பட்ட பெண்குழந்தை. துருக்கியில், ஏகன் தீவு பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவு கோளில் 7.0-ஆக பதிவாகியுள்ளது. இதனால், இஸ்மியர் நகரமே உருக்குலைந்த நிலையில் காணாப்படுகிறது. இந்த இயற்கை சீற்றத்தில் 400-க்கும் மேற்பட்ட கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ள நிலையில், இந்த இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை, இந்த இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை […]
துருக்கி நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100-ஐ எட்டியது. துருக்கியில் உள்ள ஏகன் தீவு பகுதியில், கடந்த சில நாட்களுக்கு முன்பதாக, 7.1 அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மேலும் சிறிய அளவிலான சுனாமி பாதிப்பும் ஏற்பட்டது. இந்த இயற்கை சீற்றத்தால், இஸ்மியர் நகரமே உருக்குலைந்த நிலையில் காணபடுகிறது. அங்கு 400-க்கும் மேற்பட்ட கட்டடங்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் சரிந்து விழுந்துள்ள நிலையில், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில், மீட்பு குழுவினர் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், […]