125 ஆண்டுகள் சிறை தண்டனை – உலகையே உலுக்கிய 3 வயது சிறுவனின் புகைப்படம்.!

சிரியாவில் உள்நாட்டு போர் நடைபெற்று வருவதால், பலர் ஐரோப்பிய நாடுகளுக்கு கடல் வழியாக அகதிகளாக செல்ல முயற்சிக்கின்றனர். அதில் சிலர் ஆபத்தான கடல் பயணத்தை

அய்லான் குர்தி என்ற 3 வயது குழந்தை உள்ளிட்ட 12 பேர் உயிரிழக்க காரணமான 3 பேருக்கு துருக்கி நீதிமன்றம் தலா 125 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.

சிரியாவில் உள்நாட்டு போர் நடைபெற்று வருவதால், பலர் ஐரோப்பிய நாடுகளுக்கு கடல் வழியாக அகதிகளாக செல்ல முயற்சிக்கின்றனர். அதில் சிலர் ஆபத்தான கடல் பயணத்தை மேற்கொள்வதால், செல்லும் வழியிலேயே விபத்தில் சிக்கி உயிரிழக்கும் நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கடந்த 2015ம் ஆண்டு சிரியா அகதிகள் சென்ற படகு ஒன்று, துருக்கி கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 12 பேர் உயிரிழந்தனர். அதில் 3 வயது ஆண் குழந்தையான அய்லான் குர்தி உயிரிழந்து, கரை ஒதுங்கிய புகைப்படம் சமூக வலைதளத்தில் வரைலாகி உலகையே உலுக்கியது.

unknown node

அந்த குழந்தையின் உடல் கடற்கரையில் முகம் புதைந்த நிலையில் கிடந்த காட்சி உலகையே உலுக்கியது மட்டுமல்லாமல் சர்வதேச அளவில் பல்வேறு விவாதங்களையும் ஏற்படுத்தியது. இதையடுத்து அகதிகளை சட்டவிரோதமாக படகில் அழைத்து சென்றதாக 3 பேரை துருக்கி போலீசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்த நிலையில் வழக்கு விசாரணையின் முடிவில் 3 பேர் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளும் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு அவர்கள் 3 பேருக்கும் தலா 125 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து துருக்கி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.