கடந்த இரண்டு நாட்களில் 12 வீரர்கள் கொல்லப்பட்டதை அடுத்து, துருக்கி விமானப்படை வடக்கு ஈராக் மற்றும் சிரியாவில் வான்வழித் தாக்குதல்களை நடத்தியதுள்ளது. அண்டை நாடான ஈராக்கில் உள்ள PKK தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலின் ஒரு பகுதியாக துருக்கி தொடர்ந்து வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த நிலையில், வடக்கு ஈராக்கில் கடந்த இரண்டு நாட்களில் 12 வீரர்கள் கொல்லப்பட்டதை அடுத்து, துருக்கி விமானப்படை நேற்று (சனிக்கிழமையன்று) இரவு வடக்கு ஈராக் மற்றும் சிரியாவில் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. […]
முன்னதாகே இஸ்ரேல் ராணுவம், சிரியாவின் தெற்கு பகுதியில் உள்ள ராணுவ ஆயுத கிடங்கு மற்றும் பாதுகாப்பு ரேடார் நோக்கி தாக்குதல் நடத்தியதில் 8 சிரியா ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு சிரியா கண்டனம் தெரிவித்தது . ஆனால் மேற்கண்ட தாக்குதலை அடுத்து டேரா மற்றும் அலப்போ விமான நிலையத்தில் இஸ்ரேல் ராணுவம் வான்வெளி தாக்குதலை மேற்கொண்டுள்ளது. இதில் அலப்போ விமான நிலையம் கடந்த 2 வாரங்களில் மட்டும் 4 முறை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. இன்றுவரை ஹமாஸ் […]
சிரியாவில் உள்ள மருத்துவமனையில் நடைபெற்ற இரு ஏவுகணை தாக்குதலில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். சிரியாவில் நடந்த ஏவுகணை தாக்குதல் குறித்து சிரியன் அமெரிக்க மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளதாவது: கடந்த சனிக்கிழமையன்று, சிரியாவில் அஃப்ரின் நகரத்தில் இருக்கும் அல்-ஷிபா மருத்துவமனையில் இரண்டு ஏவுகணை தாக்குதல் நடந்துள்ளது. இதில் அவசரகால பிரிவு அறை பாதிக்கப்பட்டுள்ளது. இதில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் உயிரிழந்தவர்களில் இருவர் மருத்துவப்பணியாளர்கள் மற்றும் இருவர் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள். இந்த தாக்குதலில் 11 பேர் காயமடைந்துள்ளனர். தாக்குதல் […]
சிரியா மருத்துவமனை மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் 13 பேர் உயிரிழப்பு, 27 பேர் படுகாயம். சிரியாவில் கடந்த பல ஆண்டுகளாக பயங்கரவாதிகள் பெண்கள், குழந்தைகள் பொதுமக்கள் என ஒருவரையும் விட்டு வைக்காமல் தாக்குதல் நடத்திவருகின்றனர். இந்த தாக்குதலில் இதுவரை லட்சக்கணக்கான பேர் பலியாகி உள்ள நிலையில், கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் சிரியா நாட்டின் மருத்துவமனைகள் மீது 400க்கு மேற்பட்ட பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. சிரியா அரசுக்கு எதிராக உள்ளூர் கிளர்ச்சியாளர்கள் […]
சிரியாவின் வெளியுறவு மந்திரி வலீத் அல் மொலெம் (79) இன்று காலமானார். அல்-மொலெம் 1990-99 வரை அமெரிக்காவின் சிரியாவின் தூதராக பணியாற்றினார் மற்றும் சமாதான தீர்வு குறித்து இஸ்ரேலுடன் தோல்வியுற்ற பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார். முவலெம் 2006 ஆம் ஆண்டில் நாட்டின் உயர்மட்ட தூதராக நியமிக்கப்பட்டார். அதே நேரத்தில் அவர் 2012 முதல் சிரிய துணைப் பிரதமராகவும் பணியாற்றினார். தனது நாட்டில் அமெரிக்காவின் வெளிநாட்டு தலையீட்டை எதிர்ப்பதில் அவர் ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்தார். அவரது மரணத்திற்கான காரணம் […]
அய்லான் குர்தி என்ற 3 வயது குழந்தை உள்ளிட்ட 12 பேர் உயிரிழக்க காரணமான 3 பேருக்கு துருக்கி நீதிமன்றம் தலா 125 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. சிரியாவில் உள்நாட்டு போர் நடைபெற்று வருவதால், பலர் ஐரோப்பிய நாடுகளுக்கு கடல் வழியாக அகதிகளாக செல்ல முயற்சிக்கின்றனர். அதில் சிலர் ஆபத்தான கடல் பயணத்தை மேற்கொள்வதால், செல்லும் வழியிலேயே விபத்தில் சிக்கி உயிரிழக்கும் நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கடந்த 2015ம் ஆண்டு சிரியா அகதிகள் […]
சிரியாவில் பல நாடுகளை சார்ந்த ஐ.எஸ் பயங்கரவாதிகளை எதிர்த்து சிரியா ஜனநாயக படை போர் செய்து வருகிறது. இந்த படை குர்து படை, அரபு ராணுவம், அமெரிக்க ராணுவம் இணைந்தது. சிரியாவில் இருந்து அமெரிக்க ராணுவம் விலகியதை தொடர்ந்து குர்து படை மீது பகையாக இருந்த துருக்கி ராணுவம் கடந்த 5 நாட்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் நூற்றுக்கணக்கான குர்து படை சேர்ந்தவர்களும் ,பொதுமக்களும் பலியாகியுள்ளனர். இந்த சிரியா ஜனநாயக படை சுமார் 12,000 […]
சிரியா இந்த பெயரை கேட்டாலே நம் நினைவுக்கு வருவது குண்டுகளின் சத்தமும் அலறல் குரல்களும் சிரியாவில் உள்நாட்டு போர் அதிகரித்ததன் காரணமாக பல்லாயிரக்கணக்கானோர் அகதிகளாக மற்ற நாடுகளுக்கு குடிபெயர்ந்து வருகின்றனர். அந்நாட்டில் ஈரான் ஆதரவு பெற்ற பயங்காரவாதிகள் இருப்பதாக கூறி அந்நாட்டின் மீது இஸ்ரேல் குண்டுமழை பொழிந்து வருகிறது. 2011ஆம் ஆண்டு முதல் தற்போது வரை, சுமார் 3 லட்சத்து 70 ஆயிரம் மக்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில் கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் சிரியாவில் ஒரு […]
இட்லிப் நகரின் ஒரு சிறையில் செவ்வாய் அன்று ரஷ்ய விமானங்கள் குண்டுவீசி நடத்திய தாக்குதலில் 20-க்கும் மேற்பட்ட சிறை கைதிகள் இறந்தனர். சிரிய அரசுப் படைகள் மற்றும் ஆதரவாளர்கள் மீது நடத்திய தாக்குதல்களில் 2011-ம் ஆண்டில் இருந்து 12 ஆயிரத்து 763 பொதுமக்கள் இதுவரை இறந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இட்லிப் மாகாணத்தின் வடமேற்கில் பல இடங்களில் ரஷ்ய விமானம் நேற்று தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் பச்சிளங் குழந்தைகள் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர். மேலும் […]
வட மேற்கு சிரியாவில் உள்ள அப்ரின் (Afrin) நகரம் துருக்கிப் படையினர் வசம் வீழ்ந்து விட்டது. இதுவரை காலமும் குர்திஸ் YPG படையினர் கட்டுப்பாட்டில் இருந்த அப்ரின் நகரில் தற்போது துருக்கி கொடி பறக்கிறது. துருக்கி படைகள் அப்ரின் நகரை கைப்பற்றுவதற்காக நடந்த யுத்தத்தில், இதுவரையில் 300 க்கும் அதிகமான பொதுமக்கள் பலியாகி உள்ளனர். ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர். அப்ரின் மீதான வெற்றியை பிரகடனம் செய்துள்ள துருக்கி ஜனாதிபதி எர்டோகான், “தமது படையினர் 3000 […]
12 பேர் சிரியாவின் கிழக்குப்பகுதியான கவுடா(Ghouta) பகுதியில் நடத்தப்பட்ட விமான தாக்குதலில் கொல்லப்பட்டதாகவும் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கிளர்ச்சியாளர்களின் பிடியில் உள்ள கப்ர் பாட்டன (Kafr Bhatna) எனும் கிராமத்தில் அரசுப் படைகள் விமானத்தின் மூலம் குண்டு வீசி தாக்குதல் நடத்தியதாக மனித உரிமை கண்காணிப்பு அமைப்புகள் தெரிவித்துள்ளன. தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தில் இருந்தவர்கள் உடல் கருகி உயிரிழந்ததாக அந்த அமைப்பு கூறியுள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சிரியா அதிபர் பஷார் அல் ஆசாத், சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் பகுதியில் தாக்குதல் தொடரும் என்று தெரிவித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை நடந்த செய்தியாளர்களுடனான சந்திப்பில் பஷார் இதனைத் தெரிவித்தார். இது குறித்து அவர் கூறியதாக சிரிய அரசு ஊடகம், ‘பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் உறுதியாகவுள்ளோம். சமாதானம் மற்றும் போர் நிறுத்த நடவடிக்கைகளில் நம்பிக்கை உடன்பாடு இல்லை. கிளர்ச்சியாளர்கள் படையை நோக்கி முன்னோக்கி சென்று கொண்டிருக்கிறோம்” என்று செய்தி வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபை சிரியாவில் 30 நாள் போர் நிறுத்தத்துக்கான தீர்மானத்தை கொண்டு […]
சென்னையில், சிரியாவின் உள்நாட்டு போர் விவகாரத்தில் ஐநா சபை தலையிட்டு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் நடந்த போராட்டத்தில் நுாற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். சிரியாவில் அரசுக்கும் புரட்சியாளர்களுக்கும் இடையே நடக்கும் போரில் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். இதில் ஐநா சபை உடனடியாக தலையிட்டு அமைதியை ஏற்படுத்த வேண்டுமென பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் உள்ளிட்ட இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். […]
சிரியாவில் ராணுவத்திற்கும் புரட்சி குழுவினருக்கும், கடந்த 11 நாட்களாக நீடிக்கும் சண்டையில், இதுவரை ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளதாக, அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக, சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் படை போராடி வருகிறது. இத்தகைய புரட்சி குழுவினருக்கு அமெரிக்கா, சவூதி அரேபியா, துருக்கி உள்ளிட்ட நாடுகள் உதவி வருவதாக கூறப்படுகிறது. சிரிய அரசுக்கு ரஷ்யா உதவி வருகிறது. இந்த இருதரப்பு மோதலில், கடந்த 11 நாட்களில் மட்டும், பொதுமக்களில் சுமார் 1000 பேர் […]
சிரியாவில் ரசாயண ஆயுதங்களை தயாரிக்க தேவையான உபகரணங்களை வடகொரியா அனுப்புகிறது என ஐ.நா.வின் அறிக்கை கூறுகிறது. சிரியாவில் கடந்த 7 ஆண்டுகளாக அதிபர் பஷார் அல் ஆசாத் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்து வருகிறது. சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிராக போர் நடைபெற்ற போதும் கிளர்ச்சியாளர்களை குறிவைத்து ரஷிய படைகள் தாக்குதல் நடத்தியது விமர்சனத்திற்கு உள்ளாகியது. சிரியாவில் சிறார்கள் போரில் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். சிரிய ராணுவம் விஷவாயு தாக்குதலை அவ்வபோது முன்னெடுத்து வருகிறது. […]
சிரியா, அலெப்போ நகரில், பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் கொண்டாடப் படும் கிறிஸ்துமஸ் பண்டிகை. அங்கு நடந்த உள்நாட்டுப் போரில், அலெப்போ நகரம் அல்கைதா போன்ற முஸ்லிம் மத அடிப்படைவாத இயக்கங்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. அந்தக் காலங்களில், அலெப்போவில் வாழ்ந்த கிறிஸ்தவர்கள் வெளியேற்றப் பட்டதுடன், கிறிஸ்தவ மதக் கொண்டாட்டங்களும் தடை செய்யப் பட்டிருந்தன. ஆனால், மேற்கத்திய “கிறிஸ்தவ”(?) நாடுகள் அதைக் கவனிக்காது, தீவிரவாதிகளுக்கு ஆதரவாக பேசிக்கொண்டிருந்தன.
சிரியாவில் உள்ள மாலூலா கிராமம்.இக்கிராமமானது மிகப் பழைய கிறிஸ்தவ மக்கள் வசிக்க கூடிய குடியிருப்பு பகுதியாகும். இங்கு தான் இன்னமும் இயேசு பேசிய அரமைக் மொழி (aramaic language) பேசும் மக்கள் வாழ்கிறார்கள். சிரியாவில் நடந்த உள்நாட்டுப் போரில், “கிறிஸ்தவ”(?) மேற்கத்திய நாடுகள் ஆதரித்த, முஸ்லிம் மத அடிப்படைவாத தீவிரவாதிகளின் முற்றுகை காரணமாக கடுமையாக சேதமடைந்தது.பின்னர் இப்பகுதியானது சிரிய அரச படைகளால் மீட்கப்பட்டது. இன்னமும் இக்கிராமத்தில் அம்மக்கள் இம்மொழியை வாழையடி வாழையடியாக பேசிவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.