ஸ்டாலின் மட்டும் ‘ஒன்றிணைவோம் வா’ என அனைவரையும் அழைத்து அரசியல் செய்கிறார் என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவல் தடுக்க நாடு முழுவதும் முதற்கட்டமாக 21 நாள்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. பின்னர் கொரோனா பரவல் குறையாததால் மீண்டும் 19 நாள்களுக்கு ஊரடங்கை பிரதமர் மோடி நீடித்து உத்தரவுபிறப்பித்தார்.
இதையெடுத்து, நாடு முழுவதும் ஒரு மாத காலமாக ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் மக்களின் நலனுக்காக மத்திய, மாநில அரசுகள் அவ்வப்போது முக்கிய அறிவிப்புகளை அறிவித்து வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா தொற்று ஏற்படுவதை தடுக்க தமிழக அரசு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், கொரோனா வைரசால் பிரதமர், முதலமைச்சர் உள்ளிட்ட ‘அனைவரும் விலகியிருப்போம்’ எனக் கூறுகிறார்கள். ஆனால் திமுக தலைவர் ஸ்டாலின் மட்டும் ‘ஒன்றிணைவோம் வா’ என அனைவரையும் அழைத்து அரசியல் செய்கிறார் என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.