ஜனவரி 4ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. 2023ஆம் ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் பொங்கல் விடுமுறை கழித்து தொடங்கும் என கூறப்பட்ட நிலையில், தற்போது தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜனவரி 4ஆம் தேதி நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. 3 இந்த அமைச்சரவை கூட்டத்தில் தமிழக அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர். முதன் முறையாக புதியதாக பதவியேற்ற அமைச்சர் உதயநிதியும் இதில் பங்கேற்கிறார். இதில் , […]
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 10 மணியளவில் ஆளுநரை சந்தித்து தமிழகத்தில் ஆட்சியமைக்கும் உரிமையைப் பெறவுள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலானது கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதியன்று நடைபெற்றது.இதற்கான வாக்குஎண்ணும் பணியானது மே 2 ஆம் தேதி நடந்தது.இதில்,திமுக தலைமையிலான கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்றது.எனவே,திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராகப் பதவி ஏற்பது உறுதியானது. ஆனால் இந்தப் பதவியேற்புக்கு முன்னர்,கூட்டம் கூட்டி திமுக சார்பில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவை ஸ்டாலின் பெற […]
ஊடகத்துறையினர் அனைவரும் முன்களப் பணியாளர்களாகவே கருதப்படுவார்கள் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். கொரோனா பரவலுக்கு எதிரான போரில் செய்தித்தாள்,காட்சி,ஒலி ஆகிய ஊடகங்களில் பணிபுரிவோர் அனைவரும் முன்களப் பணியாளர்களாகக் கருதப்படுவார்கள் என்று வருகின்ற மே 7 ஆம் தேதி தமிழக முதல்வராக பொறுப்பேற்கவுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மகத்தான மக்களாட்சியின் மாண்பிற்கு நான்காவது தூணாய் இருப்பது ஊடகத்துறையே.ஏனெனில்,கடுமையான மழை மற்றும் வெயிலிலும் செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் […]
வாக்கு எண்ணிக்கையின் 2 மணி நிலவரப்படி,திமுக கூட்டணி 149 தொகுதிகளிலும்,அதிமுக 74 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன. தமிழக சட்டமன்ற தேர்தலானது கடந்த ஏப்ரல் மாதம் முடிவடைந்த நிலையில்,இன்று காலை 8 மணியிலிருந்து தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கையின் 2 மணி நிலவரப்படி,திமுக போட்டியிட்ட 173 தொகுதிகளில் 119 தொகுதிகள் முன்னிலையில் உள்ளன.மேலும்,திமுகவின் கூட்டனி கட்சிகளான காங்கிரஸ் 16 தொகுதிகளிலும்,விடுதலை சிறுத்தை,மதிமுக கட்சி 4 தொகுதிகளிலும்,சிபிஐ(எம்),இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய முஸ்லீம் […]
மேற்கு வங்க முதல்வர் மம்தாவை 4-5 பேர் சேர்ந்து தள்ளி விட்டதாகவும், இதனால் அவரின் காலில் காயம் ஏற்பட்டுள்ளதாக புகாரளித்துள்ளார். இது, அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.அதில்,மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி அவர்கள் மீதான வெட்கக்கேடான தாக்குதல் இந்திய ஜனநாயகத்தின் மீதான தாக்குதலாகும்.இத்தகைய குற்றச்செயலில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். இனி இவ்வாறு நிகழாதவாறு தேர்தல் […]
தமிழகத்திற்க்கான சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் தமிழக தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.திமுக மற்றும் அதிமுக தீவிர பரப்புரையை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் திமுக சார்பாக “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” பொதுக்கூட்டம் இன்று நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் நடைபெற்றது.இதில் நெல்லையில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பொதுவாழ்வில் இருப்பவர்கள் தங்கள் மீது எந்த பழியும் எந்த குற்றச்சாட்டும் வராதவாறு செயல்பட வேண்டும்.அவ்வாறு குற்றச்சாட்டு வந்தால் அதை எதிர்கொள்ளக்கூடிய துணிச்சல் பெற்றவராக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் மக்கள் […]
அவசர அவசரமாக வேளாண் சட்டத்தை நிறைவேற்றியது பாஜக அரசுதான் என இன்று சேலத்தில் நடைபெறும் போராட்டக்களத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் கூறியுள்ளார். அண்மையில் மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் ஹரியானா, பஞ்சாப் மற்றும் உத்தரப்பிரதேச விவசாயிகள் தொடர்ந்து 9 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களின் போராட்டத்திற்கு இந்தியாவிலுள்ள எதிர்க்கட்சிகளின் ஆதரவு அதிகமாகவே உள்ளது. மேலும் போராடக்கூடிய விவசாயிகளுக்கு ஆதரவாக இன்று மாவட்ட தலைநகரங்களில் திமுக சார்பில் கருப்புக்கொடி […]
2015 இல் வெள்ளம் வந்த பிறகு தான் 2016 இல் மக்களால் அதிமுக ஆட்சியில் அமர்த்தப்பட்டுள்ளது, எனவே வெள்ளத்திலிருந்து நாங்கள் படம் கற்க வேண்டிய அவசியமில்லை என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார். வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வுமண்டலம் காரணமாக கடந்த இரு தினங்களுக்கு முன்பு நிவர் புயல் உருவாக்கி தமிழகத்தையே நிலை குலைய செய்துள்ளது. இந்த புயல் காரணமாக பெய்த கனமழை காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளிலும், கடலோர மாவட்டங்களிலும் உள்ள வீடுகளுக்குள்ளும் வீதிகளிலும் மழை […]
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவில் திருநீறு பூச மறுத்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பகீரங்க மன்னிப்பு கேட்க வேண்டுமென முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் எம்.எல்.ஏ வலியுறுத்தியுள்ளார். கோவையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த கருணாஸ் 1968ல் குன்றக்குடி அடிகளார் திருநீறு பூசுகையில் அதை ஏற்றுக்கொண்டதுடன், மரியாதை செலுத்தியதை அவமதிப்பது நாகரிகமாக இருக்காது என பெரியார் கூறினார். திராவிடர் கழகத்தின் வழியில் வந்த அக்கட்சியின் தலைவரான மு.க.ஸ்டாலின் ஒரு நாத்திகராக இருக்க வேண்டும் இல்லை ஆத்திகராக இருக்க […]
தென்காசி அருகே வனத்துறையினரால் விவசாயி உயிர் பறிக்கப்பட்ட கொடூரத்திற்கு நீதி தேவை என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தென்காசி மாவட்டம், ராவணசமுத்திரத்தை சேர்ந்தவர், அணைக்கரை முத்து. அவர், அரசின் விதிகளை மீறி, தனது விளைநிலங்களை சுற்றி மின் வேலிகளை அமைத்த நிலையில், கடையம் அலுவலகத்தில் ஆஜராகுமாறு தெரிவித்தனர்.அதன்படி, அவரும் ஆஜராகினார். அப்பொழுது அவர்க்கு நெஞ்சு வலி ஏற்பட்ட காரணத்தினால், அவரை கடையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அனால் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவர் […]
சாத்தான்குளம் போலீஸார் விசாரணையின் போது இறந்த தந்தை, மகன் வழக்கில் ஒரு சிலர் மட்டும் கைது செய்துவிட்டு ஒப்புக்கு கணக்குக் காட்டக்கூடாது. அனைவர் மீதும் வழக்கு பதிவு செய்து சரியான முறையில் தண்டிக்கப்பட வேண்டும் என திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார். இரட்டை கொலைக்கு காரணமான அனைவரது பெயர்களும் எப்ஐஆரில் சேர்க்கப்பட வேண்டும். தந்தை, மகன் கொலை வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும். இனிதான் கடமை தொடங்குகிறது, கண்காணிப்பும் தொடர்கிறது, குற்றவாளிகள் […]
டிவி தொகுப்பாளர் வரதராஜன் மீது பதியப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற கோரி திமுக தலைவர் ஸ்டாலின், தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டார். சென்னையில் கொரோனா சிகிச்சைக்காக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக டிவி நடிகர் மற்றும் பத்திரிகையாளரான வரதராஜன் குற்றம் சாற்றி ஒரு விடியோவை வெளியிட்டார். இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின் செய்தியாளர்களை அமைச்சர் விஜயபாஸ்கர் சந்தித்தார். அப்பொழுது அவர் கூறியதாவது, டிவி நடிகர், பத்திரிகையாளரான […]
ஏழைகளின் 100 யூனிட் இலவச மின்சார திட்டத்துக்கு ஆபத்து என்று ஸ்டாலின் கூறியுள்ளார். ஏற்கெனவே இருக்கும் மின்சார திட்டத்தை திருத்தி புதிய மின்சார திட்டத்தை கொண்டு வர மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த புதிய மின்சாரம் திட்டம் வந்தால் விவசாயிகளின் இலவச மின்சார திட்டம் மற்றும் ஏழைகளின் 100 யூனிட் இலவச மின்சார திட்டத்துக்கும் ஆபத்து ஏற்படும் என்று தி.மு.க தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் மத்திய அரசின் இந்த […]
மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் திமுக தலைவர் ஸ்டாலின் கருப்பு சின்னம் அணிந்து ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார். தமிழ்நாட்டில் கொரோனாவின் தாக்கம் அதிகமாகி இருக்கிறது. அதிலும் தலைநகர் சென்னை தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனாவை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இதைதொடர்ந்து தமிழக அரசு ஓர் அறிவிப்பை வெளியிட்டது. அதாவது கொரோனா பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளை தவிர மற்ற பகுதிகளில் இன்று முதல் டாஸ்மாக் மதுபானக்கடைகள் திறக்கப்படும் என அறிவித்தது. ஆனால் கொரோனா பாதிப்பு […]
ஸ்டாலின் மட்டும் ‘ஒன்றிணைவோம் வா’ என அனைவரையும் அழைத்து அரசியல் செய்கிறார் என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். கொரோனா பரவல் தடுக்க நாடு முழுவதும் முதற்கட்டமாக 21 நாள்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. பின்னர் கொரோனா பரவல் குறையாததால் மீண்டும் 19 நாள்களுக்கு ஊரடங்கை பிரதமர் மோடி நீடித்து உத்தரவுபிறப்பித்தார். இதையெடுத்து, நாடு முழுவதும் ஒரு மாத காலமாக ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் மக்களின் நலனுக்காக மத்திய, மாநில அரசுகள் அவ்வப்போது […]
பத்திரிகை உரிமையாளரை கைதி செய்ததால் இரு கட்சித் தலைவர் கண்டனம் தெறிவித்துள்ளனர். கொரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள மருத்துவ பணியாளர்களுக்கு உள்ள குறைகளைப் பற்றி செய்திகளை வெளியிட்டதற்காக கோயம்புத்தூரில் இணையதள பத்திரிக்கையின் உரிமையாளர் ஆண்ட்ரூ சாம் ராஜபாண்டியன் கைது செய்யப்பட்டார். இதுத்தொடர்பாக, மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் மற்றும் திமுக தலைவர் ஸ்டாலின் கண்டம் தெறிவித்துள்ளனர். திமுக தலைவர் ஸ்டாலின் ” கோவையில் #Corona தடுப்பு நடவடிக்கைகள் சரிவர நடைபெறவில்லை என திமுக MLA கார்த்திக் […]
என்பிஆர் கணக்கெடுக்கும் பணி துவங்க வேண்டும் என பல மாநிலங்களில் அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. இதையெடுத்து தமிழகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்புவருகின்ற ஏப்ரல் 01-ம் தேதி தொடங்க உள்ளது. இந்நிலையில் 2002 -ம் ஆண்டு எடுக்கப்பட்ட என்.பி.ஆர் விட 2020-ல் எடுக்கப்படும் கணக்கெடுப்பில் 3 அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த 3 அம்சங்கள் தான் சிறுபான்மையின மக்கள் மத்தியில் அச்சம் ஏற்படுத்தியுள்ளது.அந்த மூன்று கேள்விகள் குறித்து மத்திய அரசிடம் தமிழக அரசு […]
இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவையில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தேசிய மக்கள்தொகை பதிவேட்டிற்கு எதிராக பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற என கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். பீகார் சட்டமன்றத்தில் என்.பி.ஆர்-க்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என ஸ்டாலின் சுட்டிக்காட்டினார். வருகின்ற ஏப்ரல் 1-ம் தேதி மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி தொடங்கும் நிலையில் மு.க ஸ்டாலின் இந்த கோரிக்கையை வைத்துள்ளார். மேலும் என்.பி.ஆர் தொடர்பாக தமிழக அரசு எழுதிய கடிதத்துக்கு, மத்திய அரசு பதிலளித்துள்ளதா..? […]
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா இல்லத் திருமண விழாவில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் பேசி அவர், தமிழகத்திற்கு நல்லாட்சி விருது கொடுத்தவர்களை அடித்து உதைக்க வேண்டும் என்றும், தற்போதைய ஆட்சி கமிஷன் ஆட்சியாக இருக்கிறது என்று கடுமையாக விமர்சித்தார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா இல்லத் திருமண விழாவில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று கலந்து கொண்டார். அப்போது திமுக தலைவர் […]
தமிழகத்தில் நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய 2 தொகுதிகள் காலியாக உள்ள நிலையில் வருகின்ற 21-ந் தேதி (திங்கட்கிழமை) இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் ரெட்டியார்பட்டி வி.நாராயணன்(நாங்குநேரி) மற்றும் எம்.ஆர்.முத்தமிழ்செல்வனும்(விக்கிரவாண்டி), தி.மு.க சார்பில் நா.புகழேந்தி(விக்கிரவாண்டி) மற்றும் ரூபி மனோகரன்(நாங்குநேரி), சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சியும் போட்டியிடுகின்றனர். வரும் 19ம் தேதி மாலை 5 மணியுடன் பிரசாரம் முடிவதால் அனைத்து கட்சி தலைவர்களும் வேட்பாளர்களும் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த பிரசாத்தில் பன்னீர்செல்வம், பழனிச்சாமி, ஸ்டாலின் மற்றும் சீமான் பங்கேற்று வருகின்றனர். […]