விழுப்புரம் போலீசார் மக்களை தேடி சென்று நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடிய ஹோமியோபதி மருந்துகளை வழங்கி வருகின்றனர்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அதிகளவில் பரவி வரும் நிலையில், தமிழகத்திலும் உச்சத்தை தொட்டு செல்கிறது கொரோனா பாதிப்பு. இந்நிலையில், பலர் தன்னார்வலர்களாக முன்வந்து கொரோனாவுக்கு எதிராக போராடுபவர்களுக்கு உதவுகிறார்கள். விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் காவல் துணை கண்காணிப்பாளர் அஜய்தங்கம் ஒரு ஹோமியோபதி மருத்துவர்.
இவர் தன் பயின்ற மருத்துவனை கல்லூரியிலுள்ளவர்கள் மற்றும் வேலை செய்யும் விழுப்புர காவலர்கள் உதவியுடன் குழுக்களாக பிரிந்து மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஹோமியோபதி மருந்துகளை கொடுத்துவருகிறார். இவரது இந்த செயல் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.