கொரோனா வைரஸ் ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்ட திரைப்பட தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் நிதியை தமிழக அரசு அறிவித்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. இந்நிலையில் இந்தியாவில் மட்டும் பல கோடிக்கணக்கானோர் வேலை வாய்ப்புகளை இழந்து ஒரு வேளை உணவிற்கு வழியில்லாமல் தவித்து வருகின்றனர். இவர்களில் ஒரு பகுதியினர் திரைப்படங்களில் தொழில் செய்து வந்தவர்களும் தான்.
இந்நிலையில், கொரானா வைரஸ் ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள பதிவு செய்யப்பட்ட திரைப்பட தொழிலாளர்களுக்கு அரசு தற்பொழுது உதவ முன்வந்துள்ளது. தமிழக அரசால் ஒருவருக்கு ஆயிரம் ரூபாய் திரைப்பட தொழிலாளர்களுக்கு வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
unknown nodeunknown node