தமிழகத்தில் கொரோனாவிலிருந்து குணமானோர் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்தாலும் அதே போல் குணமானோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,986 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3,61,435 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவில் இருந்து இன்று 5,742 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரை 3,01,913 பேர் வீடு திரும்பியுள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் மேலும் 116 பேர் கொரோனாவால் உயிரிழந்ததால் இதுவரை நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6,293 ஆக உயர்ந்துள்ளது.
unknown node