காதலை ஏற்கமறுத்ததால் சிறுமி கழுத்தை அறுத்த இளைஞர் கைது ..!

Default Image

சென்னை அமைந்தகரை பகுதியை சேர்ந்தவர் நித்யானந்தா (26 ) இவர் வீட்டின் மேல்தளத்தில் எட்டாம் வகுப்பு மாணவி வசித்து வருகிறார். இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த மாணவியிடம் நித்யானந்தா தனது  காதலை கூறியுள்ளார்.

இதற்கு அந்த மாணவி மறுப்பு தெரிவித்ததால் நித்யானந்தா மறைத்து வைத்திருந்த கத்தியால் மாணவியின் கழுத்தை அறுத்துவிட்டு தப்பி ஓடி விட்டார். அந்த மாணவியின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இந்நிலையில் தப்பியோடிய நித்யானந்தாவை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் மீது போக்ஸோ  மற்றும் கொலை முயற்சி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்