காஞ்சிபுரம்: காருக்குள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்..!

Default Image

தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தில் பெண் ஒருவர் காருக்குள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.

காஞ்சிபுரத்தில் 20 வயது பெண்ணை காரில் வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த ஐந்து பேரை போலீஸார் கைது செய்தனர். இந்த சம்பவத்தின் முக்கிய குற்றவாளி ஒரு மொபைல் கடையில் பணிபுரிபவர். பாதிக்கப்பட்ட பெண்ணுடன் இவன் நட்புடன் பழகியிருக்கிறான். மேலும் அவளது பணியிடத்தில் அடிக்கடி அவளை சந்திப்பதும், சமூக வலைதளங்களில் உரையாடடுவதும் வழக்கமாக இருந்துள்ளது.

பாதிக்கப்பட்ட அந்த பெண்ணிடம் அந்த குற்றவாளி சிறிது நாட்களுக்கு முன்பு அவனது நண்பன் ஒருவரை அறிமுகப்படுத்தியுள்ளான். பின்னர் இருவரும் சேர்ந்து  பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு ஒரு தனியார் நிறுவனத்தில் நல்ல வேலை வாங்கித் தருவதாக உறுதியளித்துள்ளனர். செப்டம்பர் 8 ஆம் தேதி அன்று பாதிக்கப்பட்ட பெண்ணை முக்கிய குற்றவாளி ஒரு காரில் அழைத்துச் சென்றுள்ளார். மேலும்,  காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு பண்ணை வீட்டுக்கு அந்த பெண்ணை அழைத்துச் சென்று கொண்டிருந்துள்ளார்.

பண்ணை வீட்டுக்கு செல்லும் வழியில், குற்றம் சாட்டப்பட்டவர் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை கொடுத்துள்ளார். அதை அந்த பெண் குடித்த பிறகு, சுயநினைவை இழந்துள்ளார். இதன் பின்னர் முக்கிய குற்றவாளி அவனது நான்கு நண்பர்களை தொடர்பு கொண்டு அழைத்துள்ளார். பின்னர் 5 நபர்களும் காருக்குள் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெண், சுயநினைவு அடைந்தவுடன் தனது கால்களால் கார் கண்ணாடியை உடைத்து தப்பிக்க முயற்சி செய்துள்ளார். அந்த பெண் தப்பிக்க முயற்சி செய்தது சாலையில் உள்ள சில வாகன ஓட்டியின் கவனத்தை பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து ஒரு சிலர் காரை நோக்கி விரைந்து சென்று பிடிக்க முற்பட்டுள்ளனர். இதனை கவனித்த அந்த ஐந்து பேரும் அந்த இடத்தை விட்டு தப்பிக்க அந்த பெண்ணை சென்னை-பெங்களூரு நெடுஞ்சாலையில் தள்ளிவிட்டுள்ளனர்.

பின்னர், பாதிக்கப்பட்ட பெண் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின் அடிப்படையில், மாவட்ட எஸ்பி விசாரணை நடத்தி குற்றவாளியை பிடிக்க ஒரு தனி குழுவை அமைத்தார்.

செப்டம்பர் 9 அன்று, குற்றம் சாட்டப்பட்டவர்களில் நான்கு பேரை கைது செய்தனர். செப்டம்பர் 10 அன்று மற்றொரு குற்றவாளி கைது செய்யப்பட்டார். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது ஐபிசியின் ஏழு பிரிவுகளின் கீழ் கூட்டு பாலியல் பலாத்காரம் மற்றும் பாலியல் வன்கொடுமை உட்பட வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்