சென்னை : வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் நவம்பர் 30-ம் தேதி பிற்பகலில் மணிக்கு 70-80 கி.மீ வேகத்தில் மணிக்கு 90 கி.மீ வேகத்தில் சூறாவளி புயலாக, வட தமிழ்நாடு-புதுச்சேரி கடற்கரை அதாவது மாமல்லபுரம் – காரைக்கால் இடையே கரையை கடக்கும். புயலின் காரணமாக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் நாளை ( நவம்பர் 30.11.2024) விடுமுறை என மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்து இருந்தார்கள். இதனையடுத்து, தற்போது காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய […]
சென்னை : வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை இன்று தீவிரமடைந்து தமிழகம் நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகும் என வானிலை ஆய்வு மையம் முன்னதாக தெரிவித்திருந்தது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காலை நிலவரப்படி சென்னையில் இருந்து சுமார் 520கிமீ தூரத்தில் இருக்கிறது என கூறப்பட்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகம் நோக்கி நெருங்கி வருவதால் வட தமிழகம், தெற்கு ஆந்திரா பகுதி என பல்வேறு இடங்களில் கனமழை கொட்டிதீர்க்கும் என […]
சென்னை: தமிழநாட்டில் பருவமழை என்பது தீவிரமடைந்து வருகிறது. இந்த நிலையில், அடுத்த 4 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கையும் வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. மேலும், வடகிழக்கு பருவமழை எச்சரிக்கை நடவடிக்கைக்காக மாவட்ட வாரியாக பல முன்னேற்பாடுகள் எடுத்து வருகின்றனர். அதிலும், குறிப்பாக பாதிப்படையும் இடங்களில் இந்த முன்னேற்பாடுகள் தீவிரப்படுத்தி வருகின்றனர். மேற்கொண்டு பாதிப்புகள் ஏதேனும் ஏற்படுமாயின் அதற்கு தொடர்பு கொள்வதற்கு புகார் எண்களையும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால், சென்னை உட்பட பல மாவட்டங்களில் உள்ள மக்கள் […]
சென்னை : தமிழநாட்டில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், அடுத்த 4 நாள்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே, இன்று காலை 5.30 மணியளவில் காற்றழுத்த தாழ்வு பகுதியானது வங்கக்கடலில் உருவானது. இந்நிலையில், வடகிழக்கு பருவமழை எச்சரிக்கை நடவடிக்கைக்காக மாவட்ட வாரியாகவும் மற்றும் மாநகராட்சி சார்பிலும் பாதிப்பு தொடர்பாக புகார் அளிக்க உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம்: ஆட்சியர் அலுவலகம் உதவி எண்: 044-27237107 வாட்ஸ்அப் : 8056221077 செங்கல்பட்டு மாவட்டம்: பேரிடர் கட்டுப்பாட்டு மையம் உதவி […]
சென்னை : தமிழ்நாட்டிற்கு புதிய முதலீடுகளை ஈர்க்க, ஏற்கனவே தமிழ்நாட்டில் செயல்படும் பன்னாட்டு தொழில் நிறுவனங்கள் தங்கள் தொழிலை விரிவுபடுத்துவதற்கும் தொழில் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கும் நோக்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்க பயணம் மேற்கொண்டுள்ளார். ஏற்கனவே சான் பிரான்சிஸ்கோவில் தனது பயணத்தை முடித்துக்கொண்டு, அங்குள்ள தொழில் நிறுவன அதிகாரிகளை சந்தித்து தமிழ்நாட்டில் தொழில் தொடங்க, தொழிலை விரிவுபடுத்த அழைப்பு விடுத்தார். அதனை தொடர்ந்து தற்போது சிகாகோவில் உள்ள தொழில் நிறுவன அதிகாரிகளை சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு […]
ரூ.706 கோடி., இந்தியாவின் பிரமாண்ட பெண்கள் விடுதி.! அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பெருமிதம்.! காஞ்சிபுரம் : ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் பணிபுரியும் பெண்களுக்கென 706 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதி வளாகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். காஞ்சிபுரம் மாவட்டம் வல்லம் வடகால் பகுதியில் தமிழக அரசு சார்பில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட பெண்கள் குடியிருப்பு வளாகத்தை இன்று மாலை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். பெண் ஊழியர்கள் பயன்பெறும் வகையில் சுமார் 18,720 பெண்கள் தங்கும் வகையில் இந்த […]
மதர்சன் : நொய்டாவை தளமாகக் கொண்ட ‘சம்வர்தனா மதர்சன்’ இன்டர்நேஷனல் லிமிடெட், ஒரு இந்திய பன்னாட்டு வாகன உதிரிபாக உற்பத்தி நிறுவனமாகும். சம்வர்தனா மதர்சன் குழுமம், பொதுவாக மதர்சன் என குறிப்பிடப்படுகிறது. இது பயணிகள் கார்களுக்கான வயரிங் சேணம், பிளாஸ்டிக் பாகங்கள் மற்றும் ரியர்வியூ கண்ணாடிகளை உருவாக்குகிறது. உலகின் மிகப்பெரிய மற்றும் வேகமாக வளர்ந்து வரும் வாகன உதிரிபாக உற்பத்தியாளர்களில் ஒன்றாக வளர்ந்துள்ளது. இந்நிறுவனம் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் 67 ஏக்கரில் ரூ.1,800 கோடியில் எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலையை […]
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து பல்லக்கில் கோவிலிலிருந்து நேற்று முன்தினம் புறப்பட்ட வரதராஜ பெருமாள் வாலாஜாபாத், முத்தியால்பேட்டை, அய்யன்பேட்டை, வழியாக மண்டகப்படி கண்டருளி பழையசீவரம் கிராமத்தில் உள்ள மலை மீது எழுந்தருளினார். சுவாமி பார்வேட்டைக்கு வரும்போது வடகலை, தென்கலை சார்ந்தவர்கள் “திவ்ய பிரபஞ்சம்” படுவது வழக்கம். இதில் வடகலை தென்கலை பிரிவினர்களுக்கு இடையே பல ஆண்டுகளாக யார் முதலில் திவ்ய பிரபஞ்சம் பாடுவது என்ற பிரச்னை உள்ளது. இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் பல ஆண்டு காலமாக […]
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, காரைக்கால், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. கடலோர மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ள காரணத்தால் சென்னை வானிலை மையம் ஆரஞ்சு அலர்ட் கொடுத்துள்ளது. அதன்படி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், ராணிப்பேட்டை, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், […]
தொடர் மழை பெய்து வருவதால், பள்ளிகளுக்கு மட்டும் அரைநாள் விடுமுறை. – காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி கனமழை காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மதியத்திற்கு பின் அரைநாள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் அறிவித்திருந்தார். அதனை தொடர்ந்து தற்போது, காஞ்சிபுரம் மாவட்டத்திலும் தொடர் மழை பெய்து வருவதால், பள்ளிகளுக்கு மட்டும் அரைநாள் விடுமுறை என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி அறிவித்துள்ளார்.
கனமழை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை. கனமழை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் மோகன் உத்தரவிட்டுள்ளார். இதுபோன்று, ராணிப்பேட்டையில் மாவட்டத்தில் கனமழை காரணமாக நெமிலி மற்றும் அரக்கோணம் வட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மற்றும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும், கனமழை காரணமாக திருவள்ளூர் மற்றும் ஊத்துக்கோட்டை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு, காஞ்சிபுரம் வட்டத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு […]
செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டுள்ளது. கரையோரத்தில் உள்ள 10 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாண்டஸ் புயல் கரையை கடந்து வருவதால் பெரும்பாலான வடதமிழக பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அப்பகுதியில் பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. சென்னை சுற்றுவட்டாரப்பகுதிகளின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பி வருகிறது. அதன் முழு கொள்ளளவான 24 அடியில் , 20 அடியை தூண்டியுள்ளது. 2,695 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. மேலும் மழை […]
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே, சாலவாக்கம் பகுதியில் அரசு பேருந்து மீது கனரக லாரி மோதி விபத்து ஏற்பட்டதில் 2 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் வட்டம், படூரில் இருந்து அரசு பேருந்து ஒன்று காஞ்சிபுரம் நோக்கி வந்துள்ளது. அப்போது சாலவாக்கம் பகுதியில் வந்து கொண்டிருந்த போது அப்பகுதியில் கல்குவாரியில் இருந்து வந்த கனரக லாரி பக்கவாட்டு பகுதியில் மோதியுள்ளது. இதில், லாரியில் இருந்த பக்கவாட்டு தகரம் மோதியதில் பேருந்தில் பயணித்த ரதி […]
நாளை அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். நாளையும் நாளை மறுநாளும் தமிழகத்தில் அநேக இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து இருந்தது. அதிலும் குறிப்பாக காஞ்சிபுரம், ராணிப்பேட்டை , திருவள்ளூர் மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட் எனப்படும் அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நாளை திருவள்ளூர் மாவட்டத்திற்கு பள்ளி கல்லூரி விடுமுறை என அம்மாவட்ட ஆட்சியர் […]
காஞ்சிபுரத்தில் கேஸ் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 8-ஆக உயர்வு. காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே கேஸ் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 8-ஆக அதிகரித்துள்ளது. தேவரியப்பாக்கத்தில் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 பேர் காயம் அடைந்து சென்னை, செங்கல்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே, 7 பேர் உயிரிழந்த நிலையில், திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த அருண் என்பவர் செங்கல்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காஞ்சிபுரம் […]
அரியவகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட சிறுமி டான்யா மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ். அரியவகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட சிறுமி டான்யா, தண்டலம் தனியார் மருத்துவமனையிலிருந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். மருத்துவமனைக்கு சென்று சிறுமியை சந்தித்த பின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் நாசர், முகச்சிதைவு அறுவை சிகிச்சை செய்துகொண்ட சிறுமி டான்யாவின் படிப்பு செலவை அரசே ஏற்கும் என அறிவித்தார். சிறுமி டான்யா குடும்பத்துக்கு இலவச வீடு வழங்க பரிசீலினை […]
இன்று செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடங்குவதை முன்னிட்டு 4 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை. சென்னையை அடுத்து மாமல்லபுரத்தில் இன்று 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடங்குகிறது. இன்று தொடங்கும் உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி ஆகஸ்ட் 10ம் தேதி வரை நடைபெற உள்ளது. செஸ் ஒலிம்பியாட் தொடருக்கான ஏற்பாடுகள் குறித்து மாமல்லபுரத்தில், இன்று காலை 11 மணிக்கு அமைச்சர்கள் ஆய்வு மேற்கொள்கின்றனர். செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் தொடக்க விழா மற்றும் நிறைவு விழா நிகழ்ச்சிகள் சென்னை நேரு […]
செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவை முன்னிட்டு 4 மாவட்டங்களுக்கு ஜூலை 28 உள்ளூர் விடுமுறை அறிவிப்பு. சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வரும் 28-ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் தொடக்க விழா மற்றும் நிறைவு விழா நிகழ்ச்சிகள் சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளன. செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கான ஏற்பாடுகள் மாமல்லபுரத்தில் ஒருபுறம் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், தொடக்க விழா […]
செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் வெள்ள தடுப்பு மற்றும் நிவாரண பணிகளை முதல்வர் நேரில் ஆய்வு செய்துள்ளார். வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களிலும் வரலாறு காணாத அளவு அதிக மழை பெய்துள்ளது. இந்நிலையில் முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் வெள்ளம் பாதித்த மாவட்டங்களுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொள்வதுடன், மக்களுக்கு நிவாரண பொருட்களையும் வழங்கி வருகிறார். அந்த வகையில் இன்று காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் முதல்வர் முக ஸ்டாலின் ஆய்வு […]
காஞ்சிபுரத்தில் 7 அரசு பள்ளிகளுக்கு மட்டும் இன்று மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறிவித்துள்ளார். வடகிழக்கு பருவமழையினால் தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது.இதன்காரணமாக, சாலைகள்,பள்ளிகள் என பல்வேறு பகுதிகளில் மழைநீர் புகுந்துள்ளது.இதனால்,மழை பாதிப்பை பொறுத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வந்தது. அந்த வகையில்,மழைநீர் சூழ்ந்துள்ளதன் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உத்திரமேரூர், வாலாஜாபாத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும், மாவட்டத்தில் முகாம்களாக செயல்படும் பள்ளிகளுக்கும் நேற்று விடுமுறை அறிவித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவு […]