தமிழில் ஏன் அரசாணை இல்லை?- அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு.!

Chennai High Court orders Tamil Nadu government to respond to non-availability of orders, circulars and letters in Tamil.

அரசாணைகள், சுற்றறிக்கை, கடிதங்கள் தமிழில் இல்லாதது குறித்து தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

தமிழக அரசு பிறப்பிக்கும் ஆணைகள், உத்தரவுகள் தமிழில் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது, தமிழக அரசு வெளியிடும் அரசாணைகள், சுற்றறிக்கை, கடிதங்கள் அனைத்தையும் தமிழில் தயாரித்து வெளியிட கோரும் இந்த மனுவுக்கு வரும் மார்ச் 29 ஆம் தேதிக்குள் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. தொன்மையான தமிழ் மொழி அதிகாரிகளால் புறக்கணிப்பு என மனுதாரர் கொருக்குப்பேட்டை பழனி குற்றசாட்டியுள்ளார் என்பது குறிப்பிடப்படுகிறது.