ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்புக.. தமிழக அரசு புதிய உத்தரவு.!

தமிழக அரசின் உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு இடையேயான விகிதம் மிக குறைவாக காணப்பட்டு வந்தது. இதனால் ஆசிரியர்களுக்கு அதிகமான பணி சுமைகள் ஏற்படுகிறது என ஆசிரியர் சங்கங்கள் சார்பில் கோரிக்கை வைக்க பட்ட நிலையில் அதற்காக தமிழக அரசு அந்த கோரிக்கையை இன்று கையில் எடுத்து உள்ளது. TNPSC, SSC, IBPS, RRB உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி வகுப்புகள் – தமிழ்நாடு அரசு தமிழகத்தில், ஆசிரியர் தேர்வு வாரியம் ( TRB ) … Read more

பேரறிவாளனுக்கு பரோல் நீட்டிப்பு – தமிழக அரசுஉத்தரவு..!

பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோலை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்த பேரறிவாளனுக்கு சிறுநீரக தொற்று உள்ளிட்ட பிரச்னை காரணமாக மருத்துவ சிகிச்சை அளிக்க 30 நாட்கள் பரோல் வழங்க வேண்டும் என அவரது தாயார் அற்புதம்மாள் தமிழக அரசுக்கு கடந்த ஏப்ரல் மாதம் கோரிக்கை வைத்தார். இதைத்தொடர்ந்து, கடந்த மே மாதம் 28-ம் தேதி பரோல் வழங்கப்பட்டது. சிறுநீரக தொற்று உள்ளிட்ட உடல் சார்ந்த … Read more

#BREAKING: சுற்றுசூழல் அதிகாரி பாண்டியன் சஸ்பெண்ட்.!

ஊழல் புகாருக்கு உள்ளான சுற்றுசூழல் அதிகாரி பாண்டியனை சஸ்பெண்ட் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சுற்றுசூழல் கண்காணிப்பாளர் பாண்டியனை சஸ்பெண்ட் செய்து சுற்றுசூழல்துறை உத்தரவிட்டுள்ளது. ஓராண்டு பணி நீட்டிப்பு பெற்றிருந்த நிலையில், பாண்டியனை சஸ்பெண்ட் செய்துள்ளது சுற்றுசூழல்துறை. லஞ்சம் வாங்கி கோடிக்கணக்கில் நகை, பணம் சேர்த்தது அம்பலமானதால் பாண்டியன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. மேலும், சுற்றுச்சூழல் அதிகாரி பாண்டியனுக்கு சொந்தமான வங்கி லாக்கர்களை சோதனையிட லஞ்ச ஒழிப்புத்துறை முடிவு செய்துள்ளது. சென்னை மற்றும்  … Read more

தமிழ்நாடு மின்வாரிய பணி தனியார்மயம்.! தனியாருக்கு செல்லும் 12,000 இடங்கள்.!

மின் விநியோகத்தில் தடங்கல் இன்றி பராமரிப்பு பணி மேற்கொள்ளவே தனியார் நிறுவனம் மூலம் பணியாளர் நியமனம் – தமிழக அரசு தமிழ்நாடு மின்சார வாரியத்தில் உதவியாளர், வயர்மேன் பணியிடங்களுக்கு தனியார் நிறுவனம் மூலம் ஆட்கள் நியமனம் செய்யப்படும் என்றும் 12,000 இடங்கள் தனியாருக்கு செல்கிறது எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படுபவர்கள் 3 ஆண்டுகள் பணியில் இருப்பார்கள். அரசின் தனியார்மய நடவடிக்கையால் இனி ஐ.டி.ஐ படித்தவர்கள் நேரடியாக மின்வாரியத்தின் வயர்மேன் பணியிடத்தில் சேர முடியாது … Read more

டிசம்பர் 31-க்குள் 2000 “அம்மா மினி கிளினிக்குகள்” திறக்கப்படும் – முதல்வர் அறிவிப்பு

தமிழகம் முழுவதும் டிசம்பர் 31-க்குள் 2000 மினி கிளினிக்குகள் திறக்கப்படும் என்று  முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.  ஏழை எளிய மக்களை தேடி சென்று மருத்துவ சேவை அளிக்கும் வகையில், அம்மா மினி கிளினிக் கொண்டுவரப்படும் என முதல்வர் சமீபத்தில் அறிவித்திருந்தார். அதன்படி, சேலம் தலைவாசல் அருகே இலத்துவாடி கிராமத்தில், அம்மா மினி கிளினிக்கை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். சேலத்தில் 100 அம்மா கிளினிக்குகள் திறக்கப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக 34 அம்மா கிளினிக்குகள் திறக்கப்படவுள்ளது என்றும் … Read more

தமிழில் ஏன் அரசாணை இல்லை?- அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு.!

அரசாணைகள், சுற்றறிக்கை, கடிதங்கள் தமிழில் இல்லாதது குறித்து தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. தமிழக அரசு பிறப்பிக்கும் ஆணைகள், உத்தரவுகள் தமிழில் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது, தமிழக அரசு வெளியிடும் அரசாணைகள், சுற்றறிக்கை, கடிதங்கள் அனைத்தையும் தமிழில் தயாரித்து வெளியிட கோரும் இந்த மனுவுக்கு வரும் மார்ச் 29 ஆம் தேதிக்குள் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. தொன்மையான … Read more

ஜெயலலிதா நினைவிடம்: சிறப்பு அதிகாரியை நியமித்த தமிழக அரசு.!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிட கட்டுமான பணிகளை கண்காணிக்க சிறப்பு அதிகாரியை நியமித்தது தமிழக அரசு. சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடம் அமைக்க கடந்த 2018ம் தமிழக அரசு ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்து, அதே ஆண்டு மே மாதத்தில் கட்டுமான பணிகளுக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். மேலும், நினைவு மண்டபத்தில் அருங்காட்சியகம் மற்றும் அறிவுசார் பூங்காவில் டிஜிட்டல் வீடியோ காட்சி வைக்க ரூ.11.84 கோடியில் பணி நடந்து … Read more

“விலையேற்றத்தில் சாதனை செய்ய அரசுக்குத் திட்டம் இருக்குமோ?” – கமல்ஹாசன்

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கடந்த 1ம் தேதி சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.610 லிருந்து ரூ.660 ஆகவே உயர்ந்த நிலையில், மீண்டும் எண்ணெய் நிறுவனங்களின் நடவடிக்கையால் கேஸ் சிலிண்டரின் விலை ரூ.50 உயர்ந்து, ரூ.660 லிருந்து ரூ.710 ஆக உயர்ந்துள்ளது. 15 நாட்களில் வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.100 உயர்ந்துள்ளது என்பது கிறிப்பிடப்படுகிறது. இதுகுறித்து … Read more

ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் – தமிழக அரசு

தமிழகத்தில் உள்ள ஐபிஎஸ் அதிகாரிகள் 7 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு திடீர் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, சென்னை அமலாக்கப் பிரிவு ஐ.ஜி.யாக செந்தாமரை கண்ணன், சென்னை சைபர் க்ரைம் பிரிவு -1 காவல் கண்காணிப்பாளராக சுதாகர், TANGEDCO லஞ்ச ஒழிப்புத்துறை டி.ஜி.பி.யாக பிராஜ் கிஷோர் ரவி, ஊனமாஞ்சேரி போலீஸ் அகாடமியின் ஏ.டி.ஜி.பி மற்றும் இயக்குனராக டேவிட்சன் தேவாசீர்வாதம், சென்னை காவல் தொழில்நுட்ப சேவை பிரிவு ஏ.டி.ஜி.பி.யாக அமரேஷ் புஜாரி, சென்னை தலைமையக ஐ.ஜி.யாக ஜோஷி … Read more

#BREAKING தாய்,மகள் மரணம்..முதல்வர் ரூ. 2 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!

மழைநீர் கால்வாயில் விழுந்து இறந்த தாய், மகளின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம் நிவாரணம் தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னை: திருவள்ளூர் மாவட்டம் நொளம்பூர் அருகே மழைநீர் கால்வாயில் இருசக்கர வாகனத்தில் சென்ற கரோலின் பிரமிளா, அவரது மகள் ஈவிலின் கெசியா ஆகியோர் 6ஆம் தேதி உயிரிழந்தனர். இந்நிலையில், பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவுவிட்டுள்ளார்.