திமுக கூட்டணியில் இணைந்தது ஏன்? – கமல்ஹாசன் எம்.பி. விளக்கம்.!

திமுகவில் சேர்ந்து விட்டதாக சொல்கிறார்கள், இது கூட்டணி கிடையாது அதற்கும் மேல் புனிதமானது என்று எம்.பி. கமல்ஹாசன் கூறியுள்ளார்.

Kamal Haasan

சென்னை :மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வழிகாட்டுதலின்படி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான மண்டல நிர்வாகிகள் கலந்தாலோசனைக் இன்று சென்னை  கூட்டம் சென்னை முத்தமிழ்ப் பேரவை அரங்கி நடைபெற்றது.

இது கட்சியின் தலைமை அலுவலகத்தில் (ஆழ்வார்பேட்டை) நடக்கும் முக்கியமான நிகழ்வாகும், இதில் மாவட்ட செயலாளர்கள், துணை செயலாளர்கள், பகுதி மற்றும் வட்ட நிர்வாகிகள், அணி அமைப்பாளர்கள் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.

இந்த மாநில அளவிலான கூட்டத்திற்கு முன்னதாக, செப்டம்பர் 11 அன்று மாவட்ட செயலாளர்களுடன் முதல் கட்ட ஆலோசனை நடைபெற்றது. தற்போது நடைபெற்ற மண்டல நிர்வாகிகள் கூட்டத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பங்கு, தொகுதி அளவிலான திட்டமிடல், கூட்டணி விவாதங்கள் மற்றும் களப்பணிகள் குறித்த விரிவான ஆலோசனை நடைபெற்றது.

இந்த கூட்டம் முடிந்த பின் செய்தியாளர்களிடம் பேசுகையில், “திமுக-வில் நாம் சேர்ந்துவிட்டதாக சொல்கிறார்கள், இது கூட்டணி கிடையாது அதற்கும் மேல் புனிதமானது. திமுக நீதிக்கட்சியிலிருந்து வந்தது, நம் கட்சியிலும் நீதி உள்ளது என்னை பார்ப்பனர் என அடையாளம் காட்ட சிலர் முயற்சிக்கின்றனர். சாதி என்பதே எனக்கு ஒரு இடையூறுதான். நான் யார் என்பது, என் நடவடிக்கையிலேயே தெரியும்” என்றார்.