கூட்டணியில் இருந்து யார் விலகினாலும் அதிமுக – பாஜக கூட்டணி தொடரும் – அண்ணாமலை

BJP state leader Annamalai urges Tamil Nadu farmers to switch to organic farming.

தமிழக விவசாயிகள் இயற்கை விவசாயத்திற்கு மாற வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தல்.

கூட்டுறவு சங்கங்களில் கடன் பெற்றுள்ள விவசாயிகளுக்கு அறிவித்தபடி கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், புதிய கடனை உடனடியாக வழங்கக்கோரியும் விவசாய முன்னேற்றக்கழகம் சார்பில், நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் பொய் வாக்குறுதிகளை அளித்து திமுக ஆட்சிக்கு வந்துள்ளது. விவசாய கடன்களை முழுமையாக ரத்து செய்வதாக கூறிவிட்டு, தற்போது ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்ட கடனையும் கட்ட சொல்கிறது.

விவசாய கடன்களை தள்ளுபடி செய்து, புதிய கடனை உடனடியாக வழங்கவேண்டும் என தெரிவித்தார். வரும் நாட்களில் தமிழக விவசாயிகள் படிப்படியாக இயற்கை விவசாயத்திற்கு மாற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இதனைத்தொடர்ந்து பேசிய அவர், கூட்டணியில் இருந்து யார் விலகினாலும் அதிமுக – பாஜக கூட்டணி தொடரும் என்றும் பாஜக-அதிமுக கூட்டணி ஒரே படகில் பயணிக்கிறது எனவும் அதிமுக – பாமக இடையே நிலவும் விவகாரம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தார்.