மக்களவை தேர்தலில் யாருடன் கூட்டணி !இன்று அறிவிப்பேன்! ஜி.கே.வாசன்

This news gives information about Who will join the Lok Sabha election? Today I will announce! GK

தமிழகத்தில் பாமக-பாஜக-தேமுதிக-புதிய தமிழகம்-புதிய நீதிக்கட்சி ஆகியவை அதிமுக தலைமையில் கூட்டணி அமைக்கப்பட்டது.

மக்களவை தேர்தல் கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்று காலை அறிவிப்பேன் என்று  ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தலில் பாமக-பாஜக-புதிய தமிழகம்-புதிய நீதிக்கட்சி ஆகியவை அதிமுக தலைமையில் கூட்டணி அமைக்கப்பட்டது.

அதில் அதிமுக- பாமக இடையேயான கூட்டணியில் பாமகவிற்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.பாஜகவுக்கு 5 தொகுதிகளை ஒதுக்கியது அதிமுக.புதிய தமிழகம்-புதிய நீதிக்கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டது.

அதேபோல் அதிமுக கூட்டணியில்  தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அதிமுக தலைமையிலான கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் இணையும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டது வந்தது.

இந்நிலையில்  ஆலோசனைக்குப்பின் மக்களவை தேர்தல் கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்று  காலை அறிவிப்பேன் என்று த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.