Lok Sabha Elections : நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான பணியில் அனைத்து கட்சிகளும் தங்களின் கூட்டணி, தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை என விறுவிறுப்பாக செயல்பட்டு வருகின்றனர். இந்த சூழலில் மக்களவை தேர்தலுக்கான அட்டவணையை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் இம்மாதம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அரசியல் களம் பரபரப்பாக இருந்து வருகிறது. Read More – இன்று மனிதநேய மக்கள் கட்சி மற்றும் விசிகவுடன் திமுக பேச்சுவார்த்தை..! தமிழகத்தில் வலுவாக இருக்கும் திமுக கூட்டணியில் […]
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தற்போது யாருடனும் கூட்டணியில் இல்ல என்று அக்கட்சி மாநில தலைவர் ஜி.கே.வாசன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவை தேர்தல் அடுத்தாண்டு நடைபெற உள்ள நிலையில், பிரதான அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அதிமுக, பாஜக, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பூத் கமிட்டி அமைப்பது, கூட்டணி நிலவரம், தொகுதி ஒதுக்கீடு என ஆலோசனைகள் நடத்தி வருகிறது. இந்த சூழலில் கருத்து வேறுபாடு, மோதல் காரணமாக அதிமுக – […]
தமிழர்களின் பண்டிகையான பொங்கலுக்கு, ரூ.5,000 மதிப்புள்ள தொகுப்பை வழங்க வேண்டும் என ஜி.கே.வாசன் அறிவுறுத்தல். தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழக அரசு குடும்ப அட்டைதாரராகளுக்கு பொங்கல் தொகுப்பு வழங்குவது வழக்கம். அந்த வகையில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.வாசன் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களை பாதிக்கும் நெய் விலை உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும். அதோடு தமிழர்களின் பண்டிகையான பொங்கலுக்கு, ரூ.5,000 மதிப்புள்ள தொகுப்பை வழங்க வேண்டும் என […]
குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் தொடர்ந்து 7 வது முறையாக வெற்றிபெற்றதற்கு பிரதமர் மோடிக்கு வாழ்த்துக்கள் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் டிவீட் செய்துள்ளார். குஜராத் சட்டமன்ற தேர்தல் அண்மையில் நடைபெற்று முடிந்தது. பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக தொகுதிகளில் வென்று 7வது முறையாக ஆட்சியை கைப்பற்றியுள்ள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த தேர்தல் வெற்றிக்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் […]
தமிழ்நாட்டில் கனமழையினால் பாதிக்கப்பட்டுள்ள பயிர்களுக்குஅரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். என தாமகா தலைவர் ஜி.கே.வாசன் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். வளிமண்டலஅடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில மாதங்களாக பெய்து வரும் மழையால், அறுவடைக்கு தயாராகி இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. மேலும், அறுவடை செய்து வைத்திருந்த நெல் மூட்டைகளும் மழையில் நனைந்து இன்னும் கொள்முதல் செய்யப்படாமல் இருக்கின்றன. இதுகுறித்து கருத்து தெரிவித்த தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறுகையில், ‘ தமிழ்நாட்டில் கனமழையினால் பாதிக்கப்பட்டுள்ள […]
கொரோனா பாதிப்பில் இருக்கும் மக்களின் நலன் கருதி சிலிண்டர் விலையை ஏற்றாமல் இருக்க வேண்டும் என ஜிகே வாசன் வலியுறுத்தல். சாமானிய மக்கள் பயன்படுத்தும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்ப பெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், நேற்று ஒரு சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் ரூ.15 அதிகரிக்கப்பட்டுள்ளது. இது அனைத்து தரப்பு மக்களையும் குறிப்பாக சாதாரண மக்களைப் […]
தமிழகத்தின் வளர்ச்சிக்காக திமுக அரசு பாடுபட வேண்டுமே தவிர, பழிவாங்கும் அரசாக இருக்கக்கூடாது என ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த த.மா.க. கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தமிழகத்தின் வளர்ச்சிக்காக திமுக அரசு பாடுபட வேண்டுமே தவிர, பழிவாங்கும் அரசாக இருக்கக்கூடாது. தமிழக அரசைப் பொருத்தவரை கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் அதன் அடிப்படையில் மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் நம்பிக்கை கொடுக்க வேண்டும். உள்ளாட்சித் தேர்தல் […]
மக்கள் மற்றும் தொழில் நிறுவனங்களிடம் இருந்து மின்சார வாரியம் வைப்புத் தொகை வசூலிப்பதை ரத்து செய்ய வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக மக்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் வருமானம் இழந்து தவித்து வரும் நிலையில், மின்சார வாரியம் அவர்களிடமிருந்து வைப்பு தொகை வசூலிப்பதை ரத்து செய்ய வேண்டும் என தமிழக மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அவர்கள் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் கொரோனா […]
எங்களுக்கு கிடைக்க கூடிய வாய்ப்பை முழுமையாக பயன்படுத்தி தேர்தலில் வெற்றி பெறுவோம் என ஜி.கே வாசன் தெரிவித்தார். தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் தி.நகரில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, தமிழக மாநில காங்கிரஸ் இளைஞர் அணி 234 தொகுதிகளிலும் கூட்டணி கட்சிகளுடைய வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்யும் வகையில் களப்பணி அற்றவர்கள் என்று தெரிவிக்க விரும்புகிறேன். தமிழகத்தில் எதிர்க்கட்சியின் உடைய பொய் வாக்குறுதிகளை தற்போதைய அதிமுக ஆட்சி உடைய நிஜ வாக்குறுதிகள் நிச்சஜமாக […]
மக்களுக்காக புறநகர் மின்சார ரயிலுக்கு அனுமதி கொடுக்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே சென்றதால், கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில் உள்ளது. இந்நிலையில் தற்போது கொஞ்ச நாட்களாக தமிழக அரசு மக்களுக்காக சில தளர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. கல்வி, போக்குவரத்து துறை, தொழில்துறை என சில தளர்வுகளை அரசு மக்களுக்காக ஏற்படுத்தி வரக் கூடிய நிலையில் புறநகர் […]
கிராம வளர்ச்சிக்கு தான் கிராம சபை, எதிர்க்கட்சிகள் அரசியல் செய்வதற்கு அல்ல என தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார். தமிழக மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜிகே வாசன் அவர்கள் கிராமசபை கூட்டங்கள் நடத்தப்படாமல் இருப்பது மக்கள் நலனுக்காக தான் எனவும், ஆனால் எதிர்க்கட்சிகள் தங்கள் அரசியல் லாபத்திற்காக இந்த கிராம சபை கூட்டங்களை நடத்தி மக்களை அரசுக்கு எதிராகத் திருப்பிவிட இதை ஒரு களமாக பயன்படுத்துகிறார்கள் எனவும் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள […]
தமிழகத்தில் பாமக-பாஜக-தேமுதிக-புதிய தமிழகம்-புதிய நீதிக்கட்சி ஆகியவை அதிமுக தலைமையில் கூட்டணி அமைக்கப்பட்டது. மக்களவை தேர்தல் கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்று காலை அறிவிப்பேன் என்று ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தலில் பாமக-பாஜக-புதிய தமிழகம்-புதிய நீதிக்கட்சி ஆகியவை அதிமுக தலைமையில் கூட்டணி அமைக்கப்பட்டது. அதில் அதிமுக- பாமக இடையேயான கூட்டணியில் பாமகவிற்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.பாஜகவுக்கு 5 தொகுதிகளை ஒதுக்கியது அதிமுக.புதிய தமிழகம்-புதிய நீதிக்கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டது. அதேபோல் அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு […]
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து த.மா.கா. சார்பில் அதன் தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை , பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் மூத்த துணை தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன், துணை தலைவர் டாக்டர் இ.எஸ்.எஸ்.ராமன், தலைமை நிலைய செயலாளர் ஜி.ஆர்.வெங்கடேஷ், மாநில செயலாளர் என்.டி.எஸ்.சார்லஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். […]