10,11,12 வகுப்புகளுக்கு எந்த தேதியில் என்னென்ன தேர்வு? அட்டவணை இதோ!

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையை வெளியிட்டார் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

10,11,12 exam

சென்னை :தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இன்று (நவம்பர் 4, 2025) நடைபெற்ற முதன்மைக் கல்வி அலுவலர்கள் கூட்டத்துக்குப் பிறகு, 2026ஆம் ஆண்டுக்கான 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையை வெளியிட்டார்.  இதில், 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 11 முதல் ஏப்ரல் 6 வரை நடைபெறும், 12-ஆம் வகுப்பு மார்ச் 2 முதல் மார்ச் 26 வரை நடைபெறும், 11ஆம் வகுப்பு அரியர் தேர்வு மார்ச் 3 முதல் மார்ச் 27 வரை நடைபெறும். 8.70 லட்சம் மாணவர்கள் 10-ஆம் வகுப்பு, 8.7 லட்சம் மாணவர்கள் 12ஆம் வகுப்பு தேர்வு எழுத உள்ளனர். 12ஆம் வகுப்பு முடிவுகள் மே 8-இல், 10-ஆம் வகுப்பு முடிவுகள் மே 20-இல் வெளியாகும்.

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை

தமிழ்:மார்ச் 11

ஆங்கிலம்:மார்ச் 16

கணிதம்:மார்ச் 25

அறிவியல்:மார்ச் 30

சமூக அறிவியல்:ஏப்ரல் 02

விருப்ப பாடம்:ஏப்ரல் 06

10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வரும் மே 20-ஆம் தேதி வெளியாகும்

11ஆம் வகுப்பு தேர்வு அட்டவணை

தமிழ் மற்றும் இதர மொழிப்பாடங்கள் :மார்ச் 03

ஆங்கிலம் :மார்ச் 06

வேதியியல், கணக்குப்பதிவியல் :மார்ச் 10

கணினி அறிவியல் :மார்ச் 12

இயற்பியல், பொருளியல் :மார்ச் 18

கணிதம், விலங்கியல், வணிகவியல் :மார்ச் 24

உயிரியல், தாவரவியல், வரலாறு :மார்ச் 27

11-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வரும் மே 20-ஆம் தேதி வெளியாகும்

12ஆம் வகுப்பு தேர்வு அட்டவணை

தமிழ் மற்றும் இதர மொழிப்பாடங்கள் :மார்ச் 02

ஆங்கிலம் :மார்ச் 05

வேதியியல், கணக்குப்பதிவியல் :மார்ச் 09

இயற்பியல், பொருளியல் :மார்ச் 13

கணிதம், விலங்கியல், வணிகவியல் :மார்ச் 17

உயிரியல், தாவரவியல், வரலாறு :மார்ச் 23

கணினி அறிவியல் :மார்ச் 26

12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வரும் மே 8-ஆம் தேதி வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.