கடற்கரையில் திருமண நாள் கொண்டாட்டம்.! திரும்பி பார்த்தால் மனைவியை காணும்.! விடிந்ததும் நேர்ந்த சோகம்.!

வேலூரை சேர்ந்த கணவன், மனைவி சென்னை கடற்கரையில் சாலையில் திருமண நாள் கொண்டாட்டத்தின் போது, எதிர்பாராத விதமாக ராட்சத அலை அடித்துள்ளது. அதில் சிக்கிய மனைவி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார்.
வேலூர் காகிதப்பட்டறை பகுதியை சேர்ந்த வினி சைலா என்பவர், அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் செவிலியராக பணியாற்றி வந்தார். இவரது கணவர் விக்னேஷ். இவர்கள் 2-ம் ஆண்டு திருமண நாளைக் கொண்டாடுவதற்காக நேற்று சென்னை வந்துள்ளனர். கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கிய அவர்கள், நள்ளிரவு 12 மணி அளவில் பாலவாக்கம் கடற்கரைக்கு சென்று தங்கள் திருமண நாளை கொண்டாடியுள்ளனர். பின்னர் இருவரும் மோதிரம் மாற்றிக் கொண்டிருந்த பொழுது, எதிர்பாராத விதமாக ராட்சத அலையில் சிக்கி வினி சைலா கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து பல இடங்களில் தேடியும் மனைவி கிடைக்காததை அடுத்து, கணவர் கணேஷ் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். இந்நிலையில், இன்று காலை வினி சைலாவின் உடல் கரை ஒதுங்கியுள்ளது. பின்னர் உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கணவர் விக்னேஷ் இடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். கடற்கரையில் ஏற்பட்ட இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : சீமான் விவகாரம் முதல்… மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் வரை.!
February 28, 2025
நேபாளத்தில் இன்று அதிகாலையில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்.. பீகாரிலும் லேசான அதிர்வு.!
February 28, 2025
தமிழ்நாடு வெல்லும்: “இந்தியில் திட்டினால் தமிழில் திட்ட முடியாதா?” – முதல்வர் ஸ்டாலின் .!
February 28, 2025
சீமான் வீட்டு காவலாளிகளுக்கு மார்ச் 13ம் தேதி வரை நீதிமன்ற காவல்!
February 28, 2025
தமிழ்நாட்டின் இந்த 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் – வானிலை மையம்!
February 28, 2025