#BREAKING: தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் – மாநகராட்சி எச்சரிக்கை

கடற்கரையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் நடவடிக்கை என மாநகராட்சி எச்சரிக்கை. கடற்கரையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை மெரினா, பெசன்ட் நகர், திருவான்மியூர் ஆகிய கடற்கரையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது. பிளாஸ்டிக் இல்லா கடற்கரைகளாக பராமரிக்கப்படும் 3 இடங்களிலும் பிளாஸ்டிக் பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காலை, மாலை என இரு வேளைகளில் … Read more

#BREAKING: சென்னை மக்களுக்கு நற்செய்தி.., கடற்கரை செல்ல அனுமதி!

பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் சென்னையில் கடற்கரைகளுக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. பிப்ரவரி 1 முதல் சென்னையில் உள்ள கடற்கரைக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. மெரினா, பெசன்ட் நகர் உள்ளிட்ட கடற்கரைக்குச் செல்ல விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் சற்று குறைந்துள்ளதால் தமிழகத்தில் பிறப்பிக்கப்பட்ட இரவு  ஊரடங்கு , முழு ஊரடங்கு  ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், சென்னையில் உள்ள கடற்கரைகளுக்கு பொதுமக்கள் செல்ல … Read more

மக்களே இங்கு செல்லாதீர்கள்….இரண்டு நாட்கள் தடை!

தூத்துக்குடி:திருச்செந்தூர் முருகன் கோயில் கடற்கரையில் இன்றும், நாளையும் பக்தர்கள் புனித நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸ் நாளுக்கு நாள் அதிகமாக பரவி வரும் நிலையில் பல மாநிலங்களில் இரவு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில்,புத்தாண்டு தினக் கொண்டாட்டத்தில் மக்கள் கூட்டம் அதிகரித்து கொரோனா பரவல் சற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது என்பதன் காரணமாக கூடுதல் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில்,தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில்,கடற்கரைகளில் இன்று இரவு பொதுமக்கள் … Read more

இனி கடற்கரைகளுக்கு பொதுமக்கள் செல்லலாம் – தமிழக அரசு அறிவிப்பு!

கடற்கரைகளில் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று தமிழக அரசு ஊரடங்கில் புதிய தளர்வுகளை அளித்துள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு 23-ம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், செப்டம்பர் 6ம் தேதி காலை 6 மணி வரை ஊரடங்கை நீட்டித்து முதலமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கில் பல்வேறு புதிய தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதில் குறிப்பாக நீண்ட மாதங்களாக கடற்கரையில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லாத நிலையில், தற்போது அதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கடற்கரையில் அமைந்துள்ள … Read more

இணையத்தை கலக்கும் புகைப்படம் : அமெரிக்க கடற்கரையில் கண்டறியப்பட்ட இரட்டை தலை ஆமை…!

அமெரிக்காவிலுள்ள தென் கரோலினா பகுதியிலுள்ள கடற்கரையோரத்தில் கண்டறியப்பட்ட ஆமையின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அமெரிக்காவில் உள்ள தென் கரோலினா கடற்கரைப் பகுதியில் உள்ள எடிஸ்டோ பீச் ஸ்டேட் பூங்காவின் மணலில் கடலாமைகள் முட்டை இடுவது வழக்கம். இந்த பகுதியில் ஆமையின் முட்டைகளிலிருந்து குஞ்சுகள் வெளி வராமல் எங்கேயும் புதைந்து கிடக்கிறதா என்பதை ஆராய்வதற்காக எடிஸ்டோ பீச் ஸ்டேட் பூங்காவின் ரோந்து படை மற்றும் தன்னார்வலர்கள் அப்பகுதியில் சோதனை செய்துள்ளனர். அப்போது மூன்று முட்டைகள் பொரிக்கப்படாத நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. … Read more

டிசம்பர் 14 முதல் அனைத்து கடற்கரையையும் திறக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி!

தமிழகத்தில் வருகின்ற டிசம்பர் 14 முதல் அனைத்து கடற்கரையையும் திறக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகம் முழுவதிலுமுள்ள அனைத்து போக்குவரத்துக்கு துறை, தொழில் துறை, பள்ளிகள், கல்லூரிகள் சுற்றுலாத்தலங்கள் என மொத்தமாக கொரோனா தொற்றால் முடக்கப்பட்டது. கடந்த இரு மாதங்களாக தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் குறைந்துள்ளதையும் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு விட கூடாது என்பதையும் கருத்தில் கொண்டுள்ள தமிழக அரசு சில தளர்வுகளை அவ்வப்போது அறிவித்து வருகிறது. தற்பொழுது மீண்டும் இந்த … Read more

ஊரடங்கு தளர்வுகளில் ஒன்றாக மெரினாவுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது!

கட்டுப்பாடுகளுடன் தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகளில் ஒன்றாக மெரினாவுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக தமிழகம் முழுவதிலும் ஊரடங்கு உத்தரவு மார்ச் மாதம் பிறப்பிக்கப்பட்டது. அது முதல், பள்ளிகள், கல்லூரிகள், போக்குவரத்துக்கு, சுற்றுலாத்தலங்கள் என அனைத்தும் முடக்கப்பட்டது. இந்நிலையில், மக்களின் வாழ்வாதாரம் கருதி அரசு தளர்வுகளை அறிவித்து வருகிறது. இந்நிலையில், ஊரடங்கு இந்த மாதமும் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், சில புதிய தளர்வுகளையும் அறிவித்துள்ளது. அதன்படி சுற்றுலாத்தலங்கள் கட்டுப்பாடுகளுடன் திறக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. அது போல வருகின்ற டிசம்பர் … Read more

இன்று முதல் கேரளாவின் கடற்கரைகளுக்கு செல்ல அனுமதி.!

இன்று முதல் கேரளாவின் கடற்கரைகளுக்கு செல்ல அனுமதியளிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து கடந்த அக்டோபர் 12-ம் தேதி முதல் ரிசார்ட், ஹவுஸ் படகுகள் மற்றும் மலைப்பகுதி சுற்றுலா தலங்களுக்கு கேரள அரசு அனுமதி வழங்கியது. இந்த நிலையில், தற்போது கேரளாவில் சுற்றுலா பயணிகள் கடற்கரைகளுக்கு செல்ல இன்று முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆம் கேரள தினமான இன்று முதல் கொச்சி, திருவனந்தபுரத்தில் உள்ள கடற்கரைகளுக்கு மக்கள் செல்ல அனுமதி … Read more

சென்னையில் மறுஉத்தரவு வரும்வரை கடற்கரைகள் மூடல்!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமடைந்து வரும் நிலையில், மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவெடிக்கையாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் மால்கள், திரையரங்குகள் போன்றவற்றை மூடவும் உத்தரவிட்டனர். இந்நிலையில், சென்னையில் உள்ள அனைத்து கடற்கரைகள் இன்று மதியம் 3 மணிமுதல் மூடப்படும் என மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார். சென்னையில் உள்ள பெசன்ட்நகர், மெரினா, திருவான்மியூர், பாலவாக்கம் போன்ற கடற்கரைகள் மறு உத்தரவு வரும் வரை மூடப்படும் என அறிவித்துள்ளனர்.

கடற்கரையில் திருமண நாள் கொண்டாட்டம்.! திரும்பி பார்த்தால் மனைவியை காணும்.! விடிந்ததும் நேர்ந்த சோகம்.!

வேலூரை சேர்ந்த கணவன், மனைவி சென்னை கடற்கரையில் சாலையில் திருமண நாள் கொண்டாட்டத்தின் போது, எதிர்பாராத விதமாக ராட்சத அலை அடித்துள்ளது. அதில் சிக்கிய மனைவி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார். வேலூர் காகிதப்பட்டறை பகுதியை சேர்ந்த வினி சைலா என்பவர், அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் செவிலியராக பணியாற்றி வந்தார். இவரது கணவர் விக்னேஷ். இவர்கள் 2-ம் ஆண்டு திருமண நாளைக் கொண்டாடுவதற்காக நேற்று சென்னை வந்துள்ளனர். கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனியார் விடுதியில் அறை … Read more