புயலின் பாதையை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்-ஆர்.பி.உதயகுமார்

We are constantly monitoring the path of the storm. Guidance is being provided on the measures required to deal with the storm.

புயலின் பாதையை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். புயலை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகள் குறித்த வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு வருகிறது.

தென்கிழக்கு வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, இன்று புயலாக வருகிறது. இந்த புயலுக்கு புரவி என பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பாம்பன், ராமேஸ்வரம், தூத்துக்குடி, கன்னியாகுமரிஆகிய மாவட்டங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து,  புரவி புயல் குறித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அவர்கள் கூறுகையில், ‘புயலின் பாதையை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். புயலை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகள் குறித்த வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு வருகிறது என்றும், 24 மணி நேர கட்டுப்பாட்டு மையத்தில் தற்போதைய நிலை குறித்து தெளிவுபடுத்த பட்டு வருகிறது என்றும் தெரிவித்துள்ளார்.