மதுரை : அதிமுகவை ஒன்று சேர்ப்பது தொடர்பாக மக்களிடம் கருத்து கேட்க தென்காசியில் நேற்று முதல் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார் விகே சசிகலா. இந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சரான ஆர்.பி. உதயகுமார் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசி இருக்கிறார். மேலும், அந்த சந்திப்பில் தென்காசியில் சுற்று பயணம் மேற்கொண்டுள்ள சசிகலாவை பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கும் அவர் பதிலளித்தார். இதனை குறித்து அவர் கூறியதாவது, “சசிகலாவின் இந்த ஆடி மாத சுற்றுப்பயணம் என்பது ஒரு சுற்றுலா […]
அடுத்தடுத்து புயல் தாக்கும் என வதந்தி பரப்ப கூடாது. அப்படி வதந்தி பரப்பினால், பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த சில வாரங்களாக நிவர் மற்றும் புரவி புயல், தமிழகத்தை தாக்கிய நிலையில், பல இடங்களில் கனமழை பெய்து வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது தான் மெல்ல மெல்ல இந்த பாதிப்பில் இருந்து மக்கள் மீண்டு வருகின்றன. இந்நிலையில், கடந்த சில நாட்களாக அடுத்தடுத்து புயல் […]
தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேரில் ஆய்வு மேற்கொண்டார். புரவி புயல் எதிரொலியையடுத்து, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழக பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேரில் ஆய்வு மேற்கொண்டார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், ‘நீர் மேலாண்மை திட்டங்களை தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்தி வருவதாகவும், நீர் மேலாண்மை திட்டங்களை செயல்படுத்தி, விருதுகள் பெற்றுள்ளோம் […]
புயலின் பாதையை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். புயலை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகள் குறித்த வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு வருகிறது. தென்கிழக்கு வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, இன்று புயலாக வருகிறது. இந்த புயலுக்கு புரவி என பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பாம்பன், ராமேஸ்வரம், தூத்துக்குடி, கன்னியாகுமரிஆகிய மாவட்டங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து, புரவி புயல் குறித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அவர்கள் கூறுகையில், […]
நிவர் புயல் கடந்து விட்டது என அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் வரை மக்கள் வெளியே வர வேண்டாம். புயல் குறித்து மக்கள் பதற்றமடைய வேண்டாம். எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, திங்கட்கிழமை அன்று, வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இதனையடுத்து, இந்த தாழ்வு மண்டலம் இன்று காலை நிவர் புயலாக உருவாகியுள்ளது. இதனையடுத்து, தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 3 நாட்களுக்கு மழை […]
தூய்மை பணியாளர்கள் கடவுளுக்கு சமமானவர்கள் என கூறி அவர்கள் காலில் விழுந்து வணங்கினார் வருவாய்துறை அமைச்சர் உதயகுமார். மதுரை திருமங்கலம் பகுதியில் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் சுமார் 750 தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கும் விழாவில் வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் கலந்துகொண்டு அரிசி, வேட்டி, சேலை, முகக் கவசவம், கிருமிநாசினி ஆகியவற்றை பணியாளர்களுக்கு வழங்கினார். அந்த விழாவில் பேசுகையில், ‘ மதுரை மாவட்டத்தில் சுமார் 32 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். மாநகராட்சி பகுதியில் மட்டும் […]
எதற்காக என்னை நீக்கம் செய்தார்கள் என்றும் தெரிவியவில்லை என்று அமைச்சர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட மணிகண்டன் வினவியுள்ளார். தமிழக அமைச்சரவையில் இருந்து தகவல் மற்றும் தொழிநுட்பத்துறை அமைச்சராக இருந்த மணிகண்டன் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டார். முதலமைச்சர் பழனிசாமியிடம் இருந்து வந்த கோரிக்கையை அடுத்து ஆளுநர் மாளிகை மணிகண்டனை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுவிட்டதாக அறிவித்தது.மேலும் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறையை கூடுதலாக கவனிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஜெயலலிதா மறைவிற்கு பின்னரும் முதலமைச்சராக […]
அமைச்சரவையில் இருந்து தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் விடுவிக்கப்பட்டுள்ளார். தமிழக அமைச்சரவையில் இருந்து தகவல் மற்றும் தொழிநுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் விடுவிக்கப்பட்டுள்ளார்.முதலமைச்சர் பழனிசாமி பரிந்துரையை ஏற்று அமைச்சரவையில் இருந்து மணிகண்டனை விடுவித்து ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது.மேலும் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறையை கூடுதலாக கவனிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அமைச்சர் ஒருவர் பதவியில் நீக்கம் செய்யப்படுவது இதுவே முதல் முறை ஆகும்.