திருச்சியில் தவெக விஜய்.., அலைகடலென திரண்ட தொண்டர்கள்!!

நாமக்கல் சிறுநீரக மோசடி மற்றும் கரூரில் மதுப்பான பாட்டில் கூடுதல் கட்டணம், முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி ஆகியவற்றை விமர்சித்து பேச உள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

Namakkal - TVK

நாமக்கல் :தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், இன்று (செப்டம்பர் 27, 2025) நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் மக்கள் சந்திப்பு பிரச்சாரத்திற்காக சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தார்.  அங்கிருந்து கார் மூலம் நாமக்கல் புறப்பட்டார். நாமக்கலில் காலை பிரச்சாரத்தை முடித்த பின்னர், மதியம் 12 மணிக்கு கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் பிரச்சாரம் செய்ய உள்ளார்

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தனது பரப்புரையின்போது, அந்தந்த மாவட்டங்களின் மக்கள் சந்திக்கும் பிரச்னைகள், அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து விஜய் பேசுவது வழக்கம். அந்த வகையில், தற்போது அரசியலில் பரபரப்பாக பேசப்படும் கிட்னி திருட்டு விவகாரம் குறித்து நாமக்கல்லிலும், கரூரில் செந்தில் பாலாஜியை மையமாக வைத்தும் விஜய்யின் பேச்சு இருக்கும் என சொல்லப்படுகிறது.

தற்பொழுது, விஜய் நாமக்கல் செல்ல சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தார். அங்கிருந்து சாலை மார்க்கமாக நாமக்கல் பிரச்சார இடத்திற்கு செல்வார். முன்னதாக, நாமக்கல் கே.எஸ்.திரையரங்கம் பகுதியில் காலை 8.45 மணிக்கு பரப்புரை செய்ய அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், அவர் தாமதமாக தான் சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானத்திற்கு கிளம்பியுள்ளார். இதனிடையே, கே.எஸ்.திரையரங்கம் முன்பாக தவெகவினர் அதிகளவில் குவிந்து வருகின்றனர்.