புதிய பாஜக நியமன எம்எல்ஏவாக விக்ரமன் தேர்வு – நீதிமன்றத்திற்கு செல்வோம் முதல்வர் நாராயணசாமி பேட்டி.!

Chief Minister Narayanasamy has said that he will go to court in the matter of appointing Vikraman as the Puducherry BJP nominee MLA.

புதுச்சேரி பாஜக நியமன எம்எல்ஏவாக விக்ரமனை நியமித்த விவகாரத்தில் நீதிமன்றம் செல்வோம் என்று முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.

புதுச்சேரி சட்டப்பேரவையின் புதிய நியமன எம்எல்ஏவாக பாஜக துணைத்தலைவர் விக்ரமன் நியமிக்கப்ட்டுள்ளார். பாஜக நியமன எம்எல்ஏ சங்கர் கடந்த 17-ஆம் தேதி உயிரிழந்த நிலையில், புதிதாக விக்ரமனை மத்திய உள்துறை நியமித்துள்ளது.

இந்நிலையில், பாஜக நியமன எம்எல்ஏ தொடர்பாக நீதிமன்றம் செல்வோம் என்று முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், புதுச்சேரி பாஜக நியமன எம்எல்ஏவாக விக்ரமனை நியமித்த விவகாரத்தில் நீதிமன்றம் செல்வோம் என்று கூறியுள்ளார்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் பரிந்துரையை ஏற்காமல் செயல்பட்டதை ஏற்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இளையராஜாவை எம்எல்ஏவாக நியமிக்க கோரி கடிதம் எழுதிருந்ததாகவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.