புதுச்சேரி பாஜக நியமன எம்எல்ஏவாக விக்ரமனை நியமித்த விவகாரத்தில் நீதிமன்றம் செல்வோம் என்று முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார். புதுச்சேரி சட்டப்பேரவையின் புதிய நியமன எம்எல்ஏவாக பாஜக துணைத்தலைவர் விக்ரமன் நியமிக்கப்ட்டுள்ளார். பாஜக நியமன எம்எல்ஏ சங்கர் கடந்த 17-ஆம் தேதி உயிரிழந்த நிலையில், புதிதாக விக்ரமனை மத்திய உள்துறை நியமித்துள்ளது. இந்நிலையில், பாஜக நியமன எம்எல்ஏ தொடர்பாக நீதிமன்றம் செல்வோம் என்று முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், புதுச்சேரி பாஜக நியமன எம்எல்ஏவாக விக்ரமனை […]
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி போட்டியிடும் தொகுதியில் நானும் போட்டியிட தயார் என நமச்சிவயம் சவால் விடுத்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியின் அடிப்படை பொறுப்பில் இருந்து முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் நீக்கம் செய்யப்படுகிறார் என்று புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியம் அறிவித்திருந்தார். கட்சிக்கு துரோகம் இழைத்ததால், அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் நமச்சிவாயம். புதுச்சேரி ஆளுநரை நேரில் சந்தித்து அதற்கான கடிதத்தை வழங்கினார். […]
டெல்லியில் பாஜக தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் முன்னிலையில் முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் அக்கட்சியில் இணைந்தார். கடந்த 25-ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் அடிப்படை பொறுப்பில் இருந்து முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் நீக்கம் செய்யப்படுகிறார் என்று புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியம் அறிவித்திருந்தார். கட்சிக்கு துரோகம் இழைத்ததால், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. கட்சியிலிருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து நமச்சிவாயம், தனது வில்லியனுர் தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை புதுச்சேரி சபாநாயகரிடம் அளித்திருந்தார். நமச்சிவாயத்திற்கு […]
புதுச்சேரியோ, தமிழகமோ பாஜகவில் சேருபவர்கள் காணாமல் தான் போய் விடுவார்கள் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, அனைவரையும் அரவணைத்து செல்ல வேண்டும் என்ற நிலையில் தான் நான் செயல்பட்டு வருகிறேன். ராஜினாமா செய்தவர்களின் சரித்திரம் பற்றி புதுச்சேரி மக்களுக்கு நன்றாக தெரியும். தேர்தல் நெருங்கும்போது இதுபோன்று நடக்கும். அதையும் சமாளித்து காங்கிரஸ் தேர்தலை சந்திக்கும் என்று கூறியுள்ளார். இதனிடையே, காங்கிரஸ் கட்சியின் அடிப்படை பொறுப்பில் இருந்து அமைச்சர் […]
காங்கிரஸ் கட்சியிலிந்து அமைச்சர் நமச்சிவாயம் தற்காலிக நீக்கம் என்று புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் ஏ.வி. சுப்பிரமணியம் அறிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் அடிப்படை பொறுப்பில் இருந்து அமைச்சர் நமச்சிவாயம் தற்காலிக நீக்கம் செய்யப்படுகிறார் என்று புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியம் அறிவித்துள்ளார். கட்சிக்கு துரோகம் இழைத்ததால், அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுகிறார்கள் என தெரிவித்துள்ளார். எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து பாஜகவில் இணைய போவதாக தகவல் வெளியான நிலையில், காங்கிரஸ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைமை மீது […]