ரூ.100 கோடி சொத்தை குறைத்து காட்டிய விஜய்?

விஜய் தாக்கல் செய்த வேட்புமனுக்களில் ரூ.100 கோடி அளவுக்கு சொத்தை குறைத்து காண்பித்தது முறைகேடானது. விஜய்க்கு எதிரான வழக்கில் வருமான வரித்துறை ஒரு வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Hero Image

சென்னை : தமிழக வெற்றி கழக (தவெக) தலைவர் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் தாக்கல் செய்த வேட்புமனுக்களில் சொத்து மதிப்பு குறித்து முரண்பட்ட தகவல்கள் இடம்பெற்றுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. விஜய் சார்பில் பெரம்பூர் தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுவில் அவரது சொத்து மதிப்பு ரூ.115.13 கோடியாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளையில், திருச்சி கிழக்கு தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுவில் சொத்து மதிப்பு ரூ.220.15 கோடியாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த இரு தகவல்களும் ஒரே நபரின் சொத்து மதிப்பு என்றாலும் கணிசமான அளவு வேறுபாடு இருப்பது முறைகேடு என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், வருமான வரித்துறைக்கு ஒரு வாரத்திற்குள் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது. “விஜய் சொத்தை குறைத்து காண்பித்தது முறைகேடு” என்று நீதிமன்றம் கருதியுள்ளது.இந்த வழக்கு தொடர்பாக விஜய்க்கு எதிராக தொடரப்பட்ட மனுவை பரிசீலனை செய்த நீதிமன்றம், வருமான வரித்துறை ஒரு வாரத்திற்குள் தனது நிலைப்பாட்டைத் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

விஜய் இரு தொகுதிகளிலும் போட்டியிடும் நிலையில், அவரது வேட்புமனுக்களில் உள்ள சொத்து விவரங்களில் ஏற்பட்டுள்ள இந்த முரண்பாடு அரசியல் மற்றும் சட்ட வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.வருமான வரித்துறை தனது பதிலை சமர்ப்பித்த பிறகு, வழக்கின் அடுத்தகட்ட விசாரணை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வழக்கு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் களத்தில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.