என்னை வீட்டிற்குள் அனுமதிக்க மறுக்கிறார் விஜய் – மனைவி சங்கீதா மனு?

விவாகரத்து முடியும் வரை விஜய் வீட்டில் வசிக்க எனக்கு உரிமை உள்ளது என விஜய் மனைவி சங்கீதா புதிய மனு அளித்துள்ளார்.

Featured image

சென்னை :த.வெ.க தலைவர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து வழக்கு தொடர்பான புதிய மனு செங்கல்பட்டு குடும்ப நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் 27-ஆம் தேதி சங்கீதா விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்த நிலையில், தற்போது வழக்கு நடைபெற்று வரும் காலகட்டத்தில் சென்னை நீலாங்கரையில் உள்ள திருமணத்திற்குப் பிந்தைய குடும்ப வீட்டில் தற்காலிகமாக தங்குவதற்கு அனுமதி கோரி இந்த புதிய மனு அளிக்கப்பட்டுள்ளது.

சங்கீதா தனது மனுவில், விஜய்யை திருமணம் செய்து 26 ஆண்டுகள் குடும்பம் நடத்தியதாகவும், இரண்டு குழந்தைகளை பெற்று வளர்த்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். திருமணத்திற்குப் பிறகு பல ஆண்டுகள் விஜய்யை மிகச் சிறப்பாக கவனித்துக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். தற்போது விவாகரத்து வழக்கு நடைபெறுவதால் சென்னையில் தங்குவதற்கு தனியாக வீடு இல்லை என்றும், பிரிட்டன் குடியுரிமையுடன் லண்டனில் வசித்து வருவதால் சென்னையில் தனி இடம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விஜய் தன்னை வீட்டிற்குள் அனுமதிக்க மறுப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.இதனால் விவாகரத்து வழக்கு முடிவடையும் வரை நீலாங்கரை வீட்டில் தங்க அனுமதி வழங்க வேண்டும் என்று சங்கீதா நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளார். மேலும், கோடி கோடியாக சம்பாதிக்கும் விஜய் தனக்கும் குழந்தைகளுக்கும் சேர வேண்டிய நியாயமான ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. இடைக்கால ஜீவனாம்சம், குழந்தைகளின் பாதுகாப்பு, சொத்து பிரிப்பு போன்ற பல்வேறு விவகாரங்கள் விசாரணையில் உள்ளன.சங்கீதா ஏற்கனவே குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் ஜீவனாம்சம் தொடர்பாக பல மனுக்களை தாக்கல் செய்துள்ளார். இந்தப் புதிய மனு தற்காலிக தங்குமிடம் மற்றும் ஜீவனாம்சம் தொடர்பானது. வழக்கு விசாரணை தொடரும் நிலையில், நீதிமன்றம் இந்தக் கோரிக்கைகள் குறித்து விசாரித்து உரிய உத்தரவு பிறப்பிக்கும்.