தி.நகரில் பேசாமல் சென்ற விஜய்!

தி.நகர் தொகுதி வேட்பாளர் ஆனந்தை ஆதரித்து தவெக தலைவர் விஜய் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

Hero Image

சென்னை: தமிழக வெற்றி கழகம் (தவெக) தலைவர் விஜய், சென்னை தியாகராய நகர் தொகுதியில் இன்று (ஏப்ரல் 15) தீவிர ரோடு ஷோவில் ஈடுபட்டார்.தி.நகர் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடும் கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் அவர்களை ஆதரித்து நடைபெற்ற இந்த ரோடு ஷோவில், விஜய் இருபுறமும் சூழ்ந்திருந்த தொண்டர்கள் மற்றும் பொதுமக்களைப் பார்த்து கையசைத்தபடி சாலை வலம் வந்தார். பேசுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பேசாமலேயே திரும்பி சென்றார்.

அவருடன் ஆனந்தும் வேனில் நின்றபடி சாலை வலத்தில் பங்கேற்றார்.தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தவெக தலைவர் விஜய் சென்னை, திருச்சி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, காரைக்குடி, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்குச் சென்று ரோடு ஷோ மற்றும் பொதுக்கூட்டங்கள் மூலம் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இன்று தியாகராய நகரில் நடைபெற்ற ரோடு ஷோவின்போது ஏராளமான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் விஜய்யை வரவேற்க குவிந்திருந்தனர்.

தியாகராய நகர் ரோடு ஷோவுக்குப் பிறகு, விஜய் ஆயிரம் விளக்கு மற்றும் எழும்பூர் தொகுதிகளிலும் பரப்புரை வாகனம் மூலம் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். மாலை 4 மணியளவில் சென்னை நீலாங்கரையில் உள்ள தனது வீட்டிலிருந்து புறப்பட்ட விஜய், தொண்டர்களின் உற்சாக வரவேற்புடன் சாலை வழியாக பிரச்சாரத்தைத் தொடங்கினார்.

தேர்தல் நெருங்கும் நிலையில், தவெக தலைவர் விஜய்யின் பிரச்சாரம் தமிழ்நாடு முழுவதும் தீவிரமடைந்து வருகிறது. தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் அமோக வரவேற்பு விஜய்யின் பிரச்சாரத்துக்கு பெரும் உற்சாகத்தை அளித்து வருகிறது. இன்றைய ரோடு ஷோவில் பங்கேற்ற தொண்டர்கள், “விசில் புரட்சி! வெற்றி நிச்சயம்!” என்ற முழக்கங்களை எழுப்பியபடி விஜய்யுடன் சென்றனர்.