நேரா முதலமைச்சர் தான்னு வந்திருக்கிறார் விஜய் - கருணாஸ் தாக்கு!

சின்ன கேரக்டர்லா இல்லை, நேரடியா ஹீரோ தான்னு சொல்ற மாதிரி நேரா முதலமைச்சர் தான்னு வந்திருக்கிறார் விஜய் என கருணாஸ் தெரிவித்துள்ளார்.

Hero Image

சென்னை : சிவகங்கை தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கருணாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், தமிழக வெற்றிக் கழகம் தொடங்கி அரசியலுக்கு வந்துள்ள நடிகர் விஜய்யை நேரடியாக விமர்சித்தார்.

கருணாஸ் கூறுகையில், “சின்ன கேரக்டர்ல இல்லை, நேரடியா ஹீரோ தான்னு சொல்ற மாதிரி, நேரா முதலமைச்சர் தான்னு வந்திருக்கிறார் விஜய். அவரு ஒரு கட்சி ஆரம்பிச்சிருக்காரு. இப்பதான் ஆரம்பிச்சிருக்காரு. சினிமா படங்களில் வரும் சின்ன கேரக்டர், டாக்டர் கேரக்டர், வெளிநாட்டு மாப்பிள்ளை கேரக்டர், நண்பன், உயிர் நண்பன் போன்ற எந்த கேரக்டரும் இல்ல. Straight-ஆ நம்ம வந்து ஹீரோ தான் என்பது மாதிரி, அவர் நேரடியாக முதலமைச்சர் பதவிக்கு வந்திருக்கிறார்.

அது எந்த அளவுக்கு மக்கள் அங்கீகாரம் கொடுப்பார்கள் என்பது மிகப் பெரிய கேள்வி” என்றார்.தமிழகத்தின் பெருமையை சுட்டிக்காட்டிய கருணாஸ், “இந்தத் தமிழகம் உலகத்திற்கே துண்மையான நாகரிக வாழ்க்கையை கற்றுக்கொடுத்த ஒரு பேரினம். இந்த இனத்தில் இப்படியான நிகழ்வுகள் நடப்பது வரலாற்றில் புதிதல்ல. இது அதன் ஒரு பகுதி மட்டுமே” என்று கூறினார்.

மேலும், “விஜய் ஒரு பெரிய நட்சத்திரம். எனவே மக்களிடம் அவருக்கு நிச்சயம் அங்கீகாரம் இருக்கும். ஒரு நடிகராக பிடித்திருக்கும். என்னை நூறு பேருக்கு பிடிக்கிறதென்றால், ஆயிரம் பேருக்கு பிடிக்காமல் இருக்காது. அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அந்தப் புகழை வைத்து இத்தனை ஆண்டுகாலம் தமிழகத்திற்கும், தமிழ் சார்ந்த மக்களுக்கும், தமிழின் பிரச்சனைகளுக்கும் என்ன செய்தீர்கள்? எதற்காக களத்தில் நின்றீர்கள்? Attendance போட்டேன் என்பது மட்டும் இங்கே சரியாக வராது. நீங்கள் 100 சதவீதம் attendance போட்டீர்களா என்பது முக்கியம்” என்று கேள்வி எழுப்பினார்.

இதன் தொடர்ச்சியாக, விஜய்யின் மத அடையாளம் குறித்தும் கருணாஸ் கடுமையாக விமர்சித்தார். “இத்தனை ஆண்டுகாலம் சினிமாவில் இருந்த நீங்கள், எனக்கு விஜய் என்றுதான் தெரியும். தமிழிசை, எச்.ராஜா போன்றவர்கள் மட்டுமே உங்களை ஜோசப் விஜய் என்று மத ரீதியாக தனிமைப்படுத்த முயன்றார்கள். ஆனால் இன்று தேர்தலுக்கு வந்த பிறகு நீங்களே உங்களை ஜோசப் விஜய் என்று அடையாளப்படுத்துகிறீர்கள். இதன் உள்நோக்கம் என்ன? இத்தனை ஆண்டுகாலம் மத ரீதியாக அடையாளப்படுத்திக் கொள்ளாத நடிகர் இன்று தன்னை கிறிஸ்தவராக அடையாளப்படுத்துவதன் பின்னணி என்ன?” என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், “இத்தனை ஆண்டுகாலம் கிறிஸ்தவம் சார்ந்த மத நல்லிணக்க விழாக்களிலோ, வழிபாட்டுத் தலங்களிலோ, பண்டிகை காலங்களிலோ அந்த மக்களுக்கு வாழ்த்துக் கூறியிருக்கிறீர்களா? அவர்களுடன் எங்காவது நின்றிருக்கிறீர்களா?” என்றும் கேள்வி எழுப்பினார்.இறுதியாக, “அவரது தந்தை சந்திரசேகர் சமீபத்தில் தாய்ப்பதத்தை விட்டு திரும்பிவிட்டதாகக் கூறியிருக்கிறார். இது என்ன அப்பா ஒரு மதம், மகன் ஒரு மதம் என்ற குழப்பமா? பாஜக செய்யும் மத அரசியலை விட இது மோசமான அரசியலாக இருக்கிறது” என்று கருணாஸ் விமர்சித்தார்.

அதனைத்தொடர்ந்து, கூட்டம் குறித்தும் பேசிய கருணாஸ், “பலாப்பழத்தை ரோட்டில் வைத்தால் ஈ மொக்கும். அதே பலாப்பழத்தை கண்ணாடி கூண்டுக்குள் வைத்தால் ஈ வெளியே நிற்கும். ஒரு நடிகரைப் பார்க்க நாலு பேர் வருவது இயல்பு. அதை பெரிதாக்கி பேச வேண்டிய அவசியம் இல்லை. கேரளாவில் நடிகர்கள், நடிகைகள் வந்தால் வெறும் ஹலோ, ஹாய் என்று பார்த்துவிட்டுச் செல்வார்கள். ஆனால் இங்கு நடப்பது வேறு” என்று கூறினார்.