பக்தர்கள் கவனத்திற்கு! - திருப்பதி செப்டம்பர் மாத தரிசன டிக்கெட்டுகள் ஜூன் 22 முதல் வெளியீடு

செப்டம்பர் மாதத்திற்கான திருப்பதி ஏழுமலையான் தரிசன டிக்கெட் மற்றும் டோக்கன்களுக்கான ஆன்லைன் ஒதுக்கீட்டை திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) வரும் ஜூன் 22-ஆம் தேதி முதல் கட்டம் கட்டமாக வெளியிடுகிறது.

Hero Image

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செப்டம்பர் மாதத்தில் செல்ல திட்டமிட்டுள்ள பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. செப்டம்பர் மாத சிறப்பு தரிசனம் மற்றும் பல்வேறு சேவைகளுக்கான டோக்கன்கள் மற்றும் டிக்கெட்டுகள் வரும் ஜூன் 22ஆம் தேதி முதல் ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளதாக திருப்பதி திருமலை தேவஸ்தானம் (TTD) அறிவித்துள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய ஆன்மிக தலங்களில் ஒன்றான திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இதனால் தரிசன டிக்கெட்டுகள் முன்கூட்டியே முழுமையாக பதிவு செய்யப்பட்டு விடும் சூழல் நிலவுகிறது.

இதனைத் தொடர்ந்து, செப்டம்பர் மாதத்திற்கான சிறப்பு நுழைவு தரிசனம், அறை முன்பதிவு மற்றும் பல்வேறு அர்ஜித சேவைகளுக்கான டிக்கெட்டுகள் கட்டங்களாக வெளியிடப்பட உள்ளன. பக்தர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருப்பதி முன்பதிவு இணையதளம்:

பக்தர்கள் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது ஆதார் அட்டை, மொபைல் எண் உள்ளிட்ட விவரங்களை சரியாக பதிவு செய்ய வேண்டும் என்றும், அதிகாரப்பூர்வ https:http://ttdevasthanams.ap.gov.in இணையதளத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வார இறுதி நாட்கள், விடுமுறை நாட்கள் மற்றும் புரட்டாசி மாதத்தை முன்னிட்டு செப்டம்பர் மாதத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், முன்கூட்டியே டிக்கெட்டுகளை பதிவு செய்து கொள்ளுமாறு தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும், சிறப்பு தரிசனம், தங்கும் அறைகள், சேவை டிக்கெட்டுகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஆன்லைன் முறையிலேயே வழங்கப்படுவதால், பக்தர்கள் முன்பதிவு தேதிகளை கவனமாக பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருப்பதி தரிசனத்திற்காக காத்திருக்கும் பக்தர்களுக்கு இந்த அறிவிப்பு முக்கியமானதாக கருதப்படுகிறது.

பக்தர்கள் கவனத்திற்கு! - திருப்பதி செப்டம்பர் மாத தரிசன டிக்கெட்டுகள் ஜூன் 22 முதல் வெளியீடு