குடியரசு தின விழாவை ஓட்டி சென்னை காமராஜர் சாலையில் வாகனங்களுக்கு தடை.!
- 26-ம் தேதி குடியரசு தின விழா நடைபெற உள்ளதால்செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் தமிழக ஆளுநர் கொடியேற்றி வைக்க உள்ளார்.
- இதற்கான ஒத்திகை நிகழ்ச்சி மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. இதனால் காலை 6 மணி முதல் 10 மணி வரை காமராஜர் சாலையில் போக்குவரத்திற்கு தடை விதித்துள்ளது.
வருகின்ற 26-ம் தேதி குடியரசு தின விழா நடைபெற உள்ளதால் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் தமிழக ஆளுநர் கொடியேற்றி வைக்க உள்ளார்.
இதையடுத்து காவல் படை அணிவகுப்பு , கலை நிகழ்ச்சிகள் போன்றவை நடைபெற உள்ளதால் இதற்கான ஒத்திகை நிகழ்ச்சி மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. இதனால் காலை 6 மணி முதல் 10 மணி வரை காமராஜர் சாலையில் போக்குவரத்திற்கு காவல்துறை தடை விதித்துள்ளது.
அதன்படி சென்னை அடையார் பகுதியில் இருந்து காமராஜர் சாலை பிராட்வே நோக்கி வரும் வாகனங்கள் , கிரீன்வேஸ் சாலை மற்றும் கச்சேரி சாலை வழியாக திருப்பி விடப்படுகிறது. மயிலாப்பூர் சந்திப்பில் இருந்து வரும் வாகனங்கள் காமராஜர் சாலைக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.இந்த போக்குவரத்து மாற்றம் இன்று முதல் 23-ம் தேதி வரையும் நடைமுறைப்படுத்தப்படுகிறது.