தூத்துக்குடியில் கொரோனா ஆய்வகம் – அமைச்சர் கடம்பூர் ராஜு

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.இந்நிலையில், ஏப்ரல் 14-ம் தேதி வரை ஊரடங்கு  பிறப்பிக்கப்பட்டுள்ள  நிலையில், மே-3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.இந்நிலையில், ஏற்கனவே தூத்துக்குடியில் கொரோனா நோயை  கண்டறியும் ஆய்வகத்தை அமைக்குமாறு கோரிக்கைகள் எழுந்து வந்த நிலையில், தூத்துக்குடியில் கொரோனா ஆய்வகம் அமைக்கப்படவுள்ளதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.