அண்ணா நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

On the occasion of the 53rd death anniversary of Grandfather Anna, the DMK will hold a function at his memorial. Tribute to the leader and Chief Minister of Tamil Nadu MK Stalin.

பேரறிஞர் அண்ணாவின் 53-வது நினைவு நாளையொட்டி அவரது நினைவிடத்தில் தி.மு.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அஞ்சலி.

மிகப்பெரும் அரசியல் தலைவர் பேரறிஞர் அண்ணாவின் 53-வது நினைவு நாளில் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. பேரறிஞர் அண்ணாவின் 53-வது நினைவு நாளையொட்டி அவரது நினைவிடத்தில் தி.மு.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

சென்னை மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பொதுச்செயலாளர் துரைமுருகன் மற்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினார். அண்ணா நினைவிடத்தை தொடர்ந்து கலைஞர் நினைவிடத்தில் முதலமைச்சர் மரியாதை செலுத்தினார்.

இதனைத்தொடர்ந்து, அண்ணா நினைவிடத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகளும் மலர்தூவி மரியாதை செலுத்தினர் என்பது குறிப்பிடப்படுகிறது.