சென்னை: இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் அதிகரித்து கொண்டே செல்கிறது. பாகிஸ்தான் ராணுவம் மேற்கொள்ளும் தாக்குதல் நடவடிக்கைகளை இந்திய ராணுவம் தொடர்ந்து முறியடித்து வருகிறது. இதனால் பெரிய அளவில் சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை. இந்த தாக்குதல் நடவடிக்கைகள் காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள எல்லை பகுதிகளில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இப்படியான சூழலில் காஷ்மீரில் பள்ளி, கல்லூரிகள் பாதுகாப்பு கருதி காலவரையின்றி மூடுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இதனால் அங்குள்ள வெளிமாநில மாணவர்களை மீட்க அந்தந்த மாநில அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. காஷ்மீரில் பயிலும் தமிழக மாணவர்களை மீட்கும் நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது.
காஷ்மீரில் பயிலும் 41 மாணவர்களை பத்திரமாக் மீட்க தமிழக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. அவர்களுடன் தொடர்ந்து தொடர்புடன் இருப்பதாகவும், விரைவில் தமிழகம் அழைத்துவரப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. இதற்காக வெளியிடப்பட்ட அலைபேசி மற்றும் இமெயில் முகவரிகள் இதோ…
வாட்ஸ்அப் தொலைபேசி எண் : 75503 31902
டோல் ப்ரி தொலைபேசி எண் : 80690 09901
மிஸ்ட் கால் தொலைபேசி எண் : 80690 09900
புகார் தெரிவிக்கும் இமெயில் : nrtwb.chairman@gmail.com
ஆகிய வழிகளின் மூலம் தமிழக மாணவர்கள் மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசுகையில், “காஷ்மீரில் உள்ள தமிழ்நாட்டு மாணவர்கள் உறுதியாக மீட்கப்படுவார்கள்” என தெரிவித்தார்.
